கடவுள் ஐயப்பன் குறித்து மோசமான கருத்து.. போலீஸார் எதிரிலேயே கொலைவெறி தாக்குதல்.. பரபர சம்பவம்

மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள், நரேஷை கொலை செய்ய வந்து கொண்டிருப்பதாக கூறினர்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கடவுள் ஐயப்பனை விமர்சித்து மிக மோசமான கருத்து கூறிய நபர் மீது போலீஸார் எதிரிலேயே ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் வேனில் ஏறி தப்பிக்க நினைத்த அந்த நபரை அந்த வேனுக்குள்ளேயே சென்று அந்த கும்பல் புரட்டி எடுத்ததில் அவருக்கு மண்டையும், மூக்கும் உடைந்து ரத்தம் கொட்டியது.

இந்த தாக்குதலில் மயக்கமடைந்த அந்த நபரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, அவரை தாக்கிய நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

 புயலை கிளப்பிய சபரிமலை விவகாரம்

புயலை கிளப்பிய சபரிமலை விவகாரம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது உள்ள பெண்கள் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு நீக்கியது. இதனை ஆதரித்தும், எதிர்த்தும் இருவேறு தரப்பினர் காரசாரமான கருத்துகளை முன்வைத்தனர். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சில பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனை கண்டித்து கேரளா மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

 ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து

ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து

இந்நிலையில், இந்த விவகாரத்தில் இந்து அமைப்புகளுக்கு எதிராக தெலங்கானாவில் தீவிரமாக குரல் கொடுத்து வந்தவர் பைரி நரேஷ் (42). இதுதொடர்பாக பல கூட்டங்களில் கலந்துகொண்டும் பைரி நரேஷ் உரையாற்றி வந்தார். இந்தப் பின்னணியில், கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது இந்து அமைப்பினருக்கு எதிராக அவர் கருத்து கூறினார். அப்போது அவர், கடவுள் ஐயப்பன் குறித்து மோசமான கருத்தை தெரிவித்தார். மிகவும் ஆட்சேபத்துக்குரிய அந்தக் கருத்தால், தொலைக்காட்சி விவாதங்களில் இருந்தவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் இருந்தும் அவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

 சிறையிலே கொலை செய்ய முயற்சி

சிறையிலே கொலை செய்ய முயற்சி

பின்னர், அவரது கருத்து சமூக வலைதளங்களில் பரவி தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின் பேரில் பைரி நரேஷ் கைது செய்யப்பட்டார். அப்போது சிறையிலேயே அவரை சில நபர்கள் கொலை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் பல சிறைகளுக்கு அவர் மாற்றப்பட்டார். பின்னர் தனி சிறையிலும் அவர் அடைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அவருக்கு அண்மையில் ஜாமீன் கிடைத்தது.

 கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இந்த சூழலில், தெலங்கானா மாநிலம் ஹனம்கோண்டா மாவட்டத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக நரேஷ் கலந்துகொண்டார். மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள், நரேஷை கொலை செய்ய வந்து கொண்டிருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த நரேஷ், உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் போலீஸாரும் அங்கு வந்தனர்.

 போலீஸார் கண்ணெதிரே..

போலீஸார் கண்ணெதிரே..

ஒருகட்டத்தில், அந்த கும்பல் கல்லூரியை நெருங்குவது தெரிந்ததும் நரேஷ் அங்கிருந்து ஓடிச் சென்று போலீஸ் வேனுக்குள் தஞ்சம் புகுந்தார். போலீஸாரும் அங்கிருந்து வேனை எடுக்க முயன்றனர். ஆனால் அதற்குள்ளாக அந்த கும்பல், போலீஸ் வேனிலேயே ஏறி நரேஷ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது. உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் அவர் மீது அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸார் கண் எதிரே நடந்த போதும், போலீஸாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நரேஷை போலீஸார் அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், அவர் மீது தாக்குதல் நடத்திய 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+