பெற்ற மகனையே கூலிப்படையை ஏவி கொலை செய்த பெற்றோர்.. தாய்மாமாவும் உடந்தை.. தெலங்கானாவில் பயங்கரம்
ஹைதராபாத்: தங்களின் ஒரே மகனை பெற்றோரே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகனை கொலை செய்வதற்காக கூலிப்படைக்கு ரூ.8 லட்சத்தை கொடுத்திருப்பதும், இதற்கு அந்த இளைஞரின் தாய்மாமாவே உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக அந்த இளைஞரின் தந்தை, தாய், தாய்மாமா உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஊதாரி மகன்..
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் சிங் (58). அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராணி பாய் (50). இந்த தம்பதியருக்கு 26 வயதில் சாய்ராம் என்ற மகன் இருந்தார். மகள் திருமணம் முடிந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார். இதனிடையே, சாய்ராம் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

போதைக்கு அடிமை..
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக சாய்ராம் மது, கஞ்சா போன்ற போதைக்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் தினமும் மது அருந்துவதற்கு வீட்டில் பணம் கேட்டு சாய்ராம் தகராறு செய்து வந்துள்ளார். மகன் இப்படி சீரழிந்து போகிறானே என அவரது பெற்றோர் மிகவும் கவலைப்பட்டு வந்துள்ளனர். மகன் திருந்த வேண்டும் என கோயில் கோயிலாகவும் அவர்கள் சுற்றி வந்துள்ளனர். ஆனால் சாய்ராம் திருந்தியபாடில்லை.

தாய், தந்தைக்கு அடி உதை
இதனிடையே, போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக அங்குள்ள போதை மறுவாழ்வு மையத்திலும் சாய்ராமை அவரது பெற்றோர் அனுப்பினர். ஆனால், அந்த மையத்திற்கு இரண்டு நாட்களுக்கு மேல் அவர் செல்லவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவரது பெற்றோர், சாய்ராமுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளனர். இது, சாய்ராமுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் பணம் கேட்டு தாய், தந்தையை தினமும் அடிக்க தொடங்கி இருக்கிறார். கடந்த 6 மாதங்களாவே பெற்றோரை அடித்து உதைத்து அவர்களிடம் இருந்து பணம் பறித்து செல்வதை சாய்ராம் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தீர்த்துக்கட்ட முடிவு
மகனின் இந்த நடவடிக்கையால் வெறுத்துப் போன ராம் சிங்கும், ராணி பாயும் தங்கள் மகனை கொன்றுவிட முடிவு செய்தனர். இதனை ராணி பாயின் சகோதரர் சத்யநாராயணனுக்கு அவர்கள் கூற, அவரும் சம்மதித்துள்ளார். அதன்படி, கம்மம் மாவட்டத்தில் உள்ள கூலிப்படையை அணுகிய ராம் சிங், மகன் சாய்ராமை கொல்ல ரூ.8 லட்சத்துக்கு பேரம் பேசியுள்ளார். முதலில் 3 லட்சம் கொடுத்த ராம் சிங், காரியம் முடிந்ததும் மீதித்தொகையான ரூ.5 லட்சத்தை கொடுப்பதாக கூறியுள்ளார்.

கொலை..
இதையடுத்து, தாய்மாமா சத்யநாராயணா கடந்த மாதம் 18-ம் தேதி சாய்ராமை சூர்யாபேட் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர். சாய்ராமுக்கு அளவுக்கு அதிகமாக சத்யநாராயணா மது ஊற்றிக் கொடுத்துள்ளார். இதில் சாய்ராம் அதிக போதையாகவே, கூலிப்படையினரை செல்போனில் தொடர்புகொண்டு சத்யநாராயணா வரவழைத்தார். பின்னர் அவர்கள் சாய்ராமை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை அங்கேயே புதைத்தனர்.

கைது நடவடிக்கை
இதனிடையே, சாய்ராமின் உடலை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், அவர் கம்மம் பகுதியைச் சேர்ந்த சாய்ராம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தன்ர. இதில் தாங்கள்தான் தங்கள் மகனை கூலிப்படை ஏவி கொலை செய்தோம் என்பதை ஒப்புக்கொண்டனர். இதன்பேரில், சாய்ராமின் பெற்றோர், தாய்மாமா சத்யநாராயணா, கூலிப்படையை சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications