துப்பரவு தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம்.. இன்ஜினியர்களுக்கு 7 லட்சம்.. வெளியான அரசு சம்பள விவரம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அங்கு மூத்த அலுவலர்களின் மாத ஊதியம் 7 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல துப்புரவுப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது.
கடந்த 2014ல் தெலுங்கானா அரசு உருவாக்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அதன் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கும் தற்போது மாதந்தோறும் சுமார் 6,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது 2014ல் மாநிலம் உருவானபோது இருந்ததைவிட நான்கு மடங்கு அதிகம் என மூத்த அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பள விவரம்
மின்சாரத் துறையில் உள்ள உயர்நிலை அரசுப் பொறியாளர்கள் மாதம் 7 லட்சம் ரூபாய் வரையிலும், கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி மூத்த துப்புரவுப் பணியாளர்கள் மாதம் 2 லட்சம் ரூபாய் வரையிலும் சம்பளம் வழங்கப்படுகிறது. இவை தான் செலவுகள் உயரப் பிரதானக் காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் அரசு ஊழியர்கள் வாக்குகளை பெறச் சம்பளத் திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவே இந்தளவுக்கு ஊதியங்கள் எக்குத்தப்பாக உயரக் காரணமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். தெலுங்கான அரசு அதிகாரிகளும் கூட இதுவே தான் பிரதானக் காரணம் என்கிறார்கள். இது மாநிலத்தின் நிரந்தரச் செலவினங்களைக் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
யாருக்கு அதிகம்
தெலுங்கானாவில் மாநில மின் உற்பத்தி கழகம் (TGGENCO), மின் விநியோகக் கழகம் மற்றும் தெற்கு, வடக்கு மின் விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமைப் பொறியாளர்கள் தான் அதிகபட்சச் சம்பளம் பெறும் ஊழியர்களா உள்ளனர். அவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் வேலை செய்யும் மூத்த அலுவலர்களின் மாத ஊதியம் 7 லட்சம் ரூபாய் வரை செல்கிறது..
துப்புரவு ஊழியர்கள்
அதேபோல ஹைதராபாத் நகரின் நிர்வாகத்தை மேற்கொள்ளும் GHMCயில், நிரந்தரத் துப்புரவுப் பணியாளர்கள் சராசரி மாதச் சம்பளமாக 70,000 ரூபாய் பெறுகின்றனர். புதிதாகப் பணிக்குச் சேரும் ஊழியர்கள் சுமார் 28,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். அதேநேரம் நீண்டகாலமாகப் பணிபுரியும் மூத்த நான்காம் நிலை ஊழியர்கள் மாதம் 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள்.
ஊதிய அமைப்பைப் பொறுத்தவரை, ஜனவரி 2026 முதல் அடிப்படை ஊதியத்தில் 33.67% அகவிலைப்படி வழங்கப்படுகிறது.. அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ. 24,280 முதல் ரூ.1,33,000 வரையும், பெறும் மொத்த/கையில் ஊதியம் ரூ. 35,000 முதல் ரூ. 1.5 லட்சத்திற்கும் மேலாகவும் உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவதால், மாநில அரசுக்கு இது நீண்டகால நிதிப் பொறுப்புகளையும் உருவாகின்றன.
தெலுங்கானா நிதிநிலை
ஊதியச் செலவுகள் இந்தளவுக்கு அதிகரித்தாலும் கூட மாநிலத்தின் வருவாயும் அதிகரித்துள்ளதால் இதுவரை சம்பளம் வழங்குவதில் எந்தவொரு சிக்கலும் உருவாகவில்லை. அதேநேரம் 2023-24 நிதியாண்டில், மாநில வருவாயில் சுமார் 45% சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் வட்டிக்குச் செலவிடப்பட்டதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது.
இதுபோல சில சவால்கள் இருந்தாலும் கூட, தெலங்கானாவின் பொருளாதாரம் 10%க்கும் மேல் ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், அதிகபட்சத் தனிநபர் வருமானத்தை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கடந்தாண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் 2025-26 நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய் ரூ. 2.30 லட்சம் கோடியாகவும், செலவினம் ரூ. 2.27 லட்சம் கோடியாகவும் மதிப்பிடப்பட்டது.. மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு சுமார் ரூ.3.05 லட்சம் கோடியாக உள்ளது.. ரூ. 2,738 கோடி என்ற அளவுக்குச் சிறியளவில் வருவாய் உபரி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
-
"மாதம் ரூ.90,000.." வாயை பிளக்க வைக்கும் பானி பூரி வியாபாரியின் வருவாய்.. விவாதமான வீடியோ -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications