32,574 வாக்குச்சாவடிகள்.. மூன்றரை கோடி வாக்காளர்கள்.. நாளைய வாக்குப்பதிவுக்கு தெலுங்கானா ரெடி
ஹைதராபாத்: தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தெலுங்கானாவில் தற்போது, சந்திரசேகரராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆந்திராவுடனான பிரிவுக்கு பிறகு இதன் தலைநகரமாக ஹைதராபாத் நீடிக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 31 மாவட்டங்கள் உள்ளன. மொத்த சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 119 ஆகும். தெலுங்கானா மக்கள் தொகை 3.50 கோடியாகும்.
இதில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கை 1.36 கோடியாகும். கிராமப்புறங்களில் 2.13 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 2018-19ம் நிதியாண்டில் இம்மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ரூ. 8.43 லட்சம் கோடியாகும்.
தெலுங்கானாவில் 66.54 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். 1000 ஆண்களுக்கு 988 பெண்கள் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 2,61,36,776 கோடியாகும். மொத்த வாக்குப்பதிவு மையங்கள், 32,574.
2014ல் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி 63 தொகுதிகளையும், காங்கிரஸ் 21 தொகுதிகளையும், தெலுங்கு தேசம் 15 தொகுதிகளையும் வென்றது. AIMIM கட்சி 7 தொகுதிகளையும், பாஜக 5 தொகுதிகளையும் வென்றன. பிறர் 8 தொகுதிகளை கைப்பற்றினர். இங்கு 88 பொதுத்தொகுதிகளாகும். 19 தாழ்த்தப்பட்டோருக்கான ரிசர்வ் தொகுதி. பழங்குடியினருக்காக 12 தொகுதிகள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications