கொழுந்தன், கணவன் எதுவுமே யோசிக்கல.. ஓட்டம் பிடித்த தெலுங்கானா பெண்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் குடும்ப உறவுகளை சீர்குலைக்கும் வகையில் அரங்கேறிய ஒரு கள்ளக்காதல் விவகாரமும், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவமும் மொத்த பேருக்கும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டு.. கணவனை விட்டுவிட்டு கொழுந்தனுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை, கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து பிடித்துள்ளார்கள்.. அதற்கு பிறகு என்ன நடந்தது? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஐலாபூர் கிராமத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. திருமணமாகி, கணவருடன் வசித்து வந்தார்.. இந்நிலையில், இந்த பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி திடீரென தனது வீட்டிலிருந்து மாயமானார்.

மனைவியை காணவில்லை
வீட்டில் மனைவியை காணாமல் பதறிப்போய் தேடினார்.. எங்குமே அவர் கிடைக்காமல், உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். காவல்துறையினரும் வழக்கைப் பதிவு செய்து பெண்ணைத் தேடி வந்த நிலையில், செப்டம்பர் 2ம் தேதி அந்தப் பெண் தனது கணவரின் சகோதரர் பொச்சய்யா என்பவருடன் திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஆஜரானார்.
பிறகு போலீசாரிடம், அவர்கள் வாக்குமூலம் தந்தனர்.. அந்த வாக்குமூலத்தில், "நாங்கள் இருவரும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியேறினோம்.. இனி 2 பேருமே சேர்ந்து வாழ போகிறோம்" என்றனர்..
கவுன்சிலிங் தந்த போலீஸ்
உடனே காவல்துறையினர் அந்தப் பெண்ணிற்கும், கணவரின் சகோதரரான பொச்சய்யாவுக்கும் கவுன்சிலிங் தந்து, எச்சரிக்கைகளும் வழங்கி அனுப்பி வைத்தனர்.. ஆனாலும், இருவரும் காவல் நிலையத்திலிருந்து வெளியேறி ஒரே வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கினர்.
இந்த விவகாரம் பொச்சய்யாவின் உறவினர்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கொதித்தெழுந்த பொச்சய்யாவின் உறவினர்கள் அந்தப் பெண் தங்கியிருந்த இடத்திற்கு நேரில் சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.. பேச்சுவார்த்தை முற்றி மோதலாகவும் மாறிவிட்டது.
அதற்குள் இந்த விஷயம் சோஷியல் மீடியாவிலும் பரவ ஆரம்பித்துவிட்டது.. உடனே அக்கம்பக்கத்து கிராமத்து மக்களுக்கும் இந்த விஷயம் தெரிந்து, திரண்டு வந்தனர்..
பஞ்சாயத்து செய்த ஊர் மக்கள்
ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு, இந்த கள்ளக்காதல் விவகாரம் பேசப்பட்டது.. அப்போது பொச்சய்யா தரப்பினர் ஆத்திரம் அடைந்து, அப்பெண்ணை தாக்கியதுடன், அவரது முகத்தில் மிளகாய்ப் பொடியையும் அள்ளி வீசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அப்பெண்ணின் ஆடைகளை களைந்து, அவரது உடலின் பாகங்களில் மிளகாய்ப் பொடியும் "ஜீடி" என்ற திரவமும் தடவி சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் பரவி, பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
ஆனால், இந்த தகவல்களை, மேட்பள்ளி துணை காவல் கண்காணிப்பாளர் ஏ. ராமுலு மறுத்தார்.. சோஷியல் மீடியாவில் பரப்பப்படும் சாதி பஞ்சாயத்து மற்றும் ஆடையைக் களைந்து சித்ரவதை செய்தல் போன்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், இது குடும்பத் தகராறு காரணமாக நடந்த தாக்குதல் மட்டுமே என்றும் விளக்கம் தந்தார்..
கொழுந்தன், கணவன்
இதையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை துவங்கியது.. அப்போது பெண்ணின் முகத்தில் மட்டுமே மிளகாய்ப் பொடி வீசப்பட்டது என்றும், உடலின் பாகங்கள் மிளகாய்ப்பொடி தடவி சித்ரவதை செய்யப்படவில்லை என்றும் உறுதியானது..
பிறகு, நடந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. இந்த விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஒரு குடும்பத்தில் நடந்த கள்ளக்காதல் விவகாரம், ஊர்க்கலவரமாக மாறி, பஞ்சாயத்துவரை சென்றது தெலுங்கானாவில் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது...!!!


Click it and Unblock the Notifications
