தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்.. காலமானார் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தையும் மூத்த நடிகருமான கிருஷ்ணா இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் மகேஷ் பாபு.
இவரது தந்தை கிருஷ்ணா பல்வேறு மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்தவர்.

காங்கிரஸ் எம்பி
பத்ம பூஷன் விருது பெற்ற இவர், பின்னாட்களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1989 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் வந்த அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த கிருஷ்ணா
வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நடிகர் கிருஷ்ணாவை அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர். சுயநினைவின்றி இருந்த நடிகர் கிருஷ்ணாவுக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை
இதனை தொடர்ந்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. அதன் பின்னர் மருத்துவமனையில் நடிகர் கிருஷ்ணாவுக்கு மருத்துவர்கள் உயர்ரக தீவிர சிகிச்சைகளை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியானது.

உடல்நிலை மோசம்
நடிகர் கிருஷ்ணாவை பரிசோதித்த மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில், நடிகர் கிருஷ்ணாவுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தது. அவருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மறைந்தார் நடிகர் கிருஷ்ணா
இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா, இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு தெலுங்கு சினிமா ரசிகர்கள், திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications