"சில்மிஷம்".. 14 வயது பிஞ்சு.. இயற்கைக்கு மாறான "உறவு".. மதரஸா பள்ளி ஆசிரியராம்.. தூக்கியது போலீஸ்
14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
ஹைதராபாத்: கல்வியை போதிக்கும் மதரஸாவிலேயே இப்படி ஒரு காரியமா? என்று பெற்றோர்கள் அதிர்ந்து போய் கேட்கிறார்கள்.. என்ன நடந்தது ஹைதராபாத்தில்?
மதரஸாக்கள் குறித்த மதக் கல்வியுடன் கூடிய கல்வியானது, மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மதரஸாக்கள் இதற்காகவே இயங்கியும் வருகின்றன..
ஆனால், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் மதரஸாக்கள் குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.. குறிப்பாக, மதரஸாக்களில் என்ன போதிக்கப்படுகிறது என்பது கண்காணிக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் சொல்லவருகிறார்கள்.

புல்டோசர்
அதிலும் இந்த விஷயத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் கொஞ்சம் ஓவராகவே சென்று கொண்டிருக்கிறது.. அம்மாநிலத்தில் மதரஸாக்களுக்கான மானியத்தையே நிறுத்திவிட்டது.. சிறுபான்மையினருக்கு மதராசா கல்வி அவசியம் என்றாலும், தேசியகீதம் பாடுவதும் அவசியம் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.. அவ்வளவுஏன், அஸ்ஸாமில்கூட, ஒருசில மதரஸாக்களை புல்டோசர் கொண்டு அவற்றை பள்ளிகளாக மாற்றும் அளவிற்கு சென்றதையும் இங்கு நினைவுகூரத்தக்கது.

வாசலிலேயே...
இதேபோல் ஹிஜாப் விவகாரம் தலைதூக்கிய போது, கோவில் வாசலில்களில் இஸ்லாமியர்கள் கடை போடக்கூடாது என்று கோவில் நிர்வாகங்கள் தரப்பில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதுமட்டுமல்ல, தாவணகரே மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏவும், அம்மாநில முதல்வரின் அரசியல் செயலாளருமான ரேணுகாச்சார்யா செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.. அப்போது, மதரசா பள்ளிகளில் அப்பாவி மாணவர்களிடையே தேச விரோத பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், வன்முறையை தூண்டும் பாடம் கற்பிக்கப்படுவதாகவும், அதனால், மதரசா பள்ளிகளையே தடை செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர், மற்றும் அமைச்சரிடம் கேட்டுக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.

மதரஸா
இப்படி எத்தனையோ விஷயங்கள் மதராஸாவுக்கு எதிராக பாஜக தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில், கல்வியை போதிக்கும் மதராஸாவிலேயே, ஒருசிலரால் அவப்பெயர் நேர்ந்துவிடுவது கவலைக்குரியதாக உள்ளது.. இப்போதும் ஒரு சம்பவம் அப்படித்தான் தெலுங்கானாவில் நடந்துள்ளது.. ஹைதராபாத்தில் சந்தோஷ் நகர் பகுதியில் மதரஸா ஒன்று இயங்கி வருகிறது.. இங்கு ஏராளமான பிள்ளைகள் கல்வி கற்று வருகிறார்கள். 21 வயது மதரஸா ஆசிரியர் ஒருவர், 14 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்..

உடலுறவு
அதாவது, இயற்கைக்கு முரணான உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.. தினம் தினம் இந்த டார்ச்சரால், அந்த மாணவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போயுள்ளது.. இதை கவனித்த பெற்றோர், பதறிப்போய் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர்.. அவதியை பொறுக்க முடியாத மாணவனோ, நடந்த விஷயம் அத்தனையும் பெற்றோரிடம் கூறியுள்ளான். இதைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், நேரடியாக போலீஸுக்கே சென்றுவிட்டனர்.. இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டதுடன், மாணவனை பாலியல் பலாத்காரம் செய்து வந்த அந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்... கல்வியை போதிக்கும் மதரஸாவிலேயே இப்படியா? என்று பலரும் விக்கித்து போயுள்ளனர்..!
-
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
சிரிஞ்ச் மூலம் ரத்தத்தை எடுத்த காதலன்.. ஒரு ஊசி மாற்றிய அந்த நிமிடம்! ஹைதராபாத்தை உலுக்கிய அதிர்ச்சி -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம்












Click it and Unblock the Notifications