இஸ்லாத்தில் இது மிக கொடூரமான குற்றம்... தலித் இளைஞர் படுகொலைக்கு அசதுத்தீன் ஒவைசி கடும் கண்டனம்
ஐதராபாத்: இஸ்லாமிய பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டது இஸ்லாத்தில் மிக மோசமான குற்றம் என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசதுத்தீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் சரூர் நகரில் நாகராஜு என்ற தலித் இளைஞர் இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை தனது மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த நாகராஜுவை பெண்ணின் சகோதரர் சையது மொபின் அஹ்மத் தனது நண்பர் மசூத் அஹமதுவுடன் சேர்ந்து குத்திக் கொலை செய்தார்.
பரபரப்பான சாலையில் பொதுமக்கள் மத்தியில் நிகழ்ந்த கொடூர கொலை சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஐதராபாத் எம்.பியும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவருமான அசதுத்தீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஆனால், சில சுயநலவாத கட்சிகள் இந்த சம்பவத்துக்கு வேறு நிறத்தை பூச முயல்கின்றனர். ஐதராபாத்தில் நாகராஜு கொல்லப்பட்டது இஸ்லாத்துக்கே எதிரானது. அந்த பெண் தனது விருப்பத்தின்பேரிலேயே இந்ததிருமணத்தை செய்திருக்கிறார். சட்டமும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.
இதற்காக அவரது கணவரை கொலை செய்ய பெண்ணின் சகோதரருக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. இது மிகப்பெரிய குற்றம். இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையிலும் இது மாபெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் சகோதரரை உடனடியாக தண்டிக்க வேண்டும்." என வலியுறுத்தி இருக்கிறார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications