இதயத்தையே நொறுங்க வைத்த ஹைதராபாத் விபத்து.. வாக்கிங் போனவர்கள் மீது ஷாக்.. சிசிடிவி காட்சி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பந்த்லகுடாவில் காலை வாக்கிங் சென்றவர்கள் மீது அசுர வேகத்தில் வந்த கார் மோதியதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். ஜூலை 4ஆம் தேதியான இன்று இந்த கொடூரமான விபத்து நடந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சியை பார்த்து பலரும் மிரண்டு போய் உள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சன்சிட்டி பந்த்லகுடாவில் இன்று காலை சிலர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். அப்படி காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த தாய், குழந்தை மற்றும் ஒரு பெண் உள்பட 7 பேரின் பின்னால் அசுர வேகத்தில் வந்த ஹோண்டா ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.

Three morning walkers including child were killed in a car collision in Hyderabad

மோதிய வேகத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்தனர். இதேபோல் வாக்கிங் சென்று கொண்டிருந்த மற்றுமொரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கோர விபத்தில்3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இரக்கம் இல்லாத டிரைவர்: ஆனால் ஈவு இரக்கமே இல்லாமல் இந்த கோர விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், காரை விட்டு இறங்கி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஹைதராபாத் நகர போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் உஸ்மானியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர் .

நேரில் பார்த்தவர்கள் சாட்சி: இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் கூறுகையில், கார் அதிவேகத்தில் சென்றது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்றவர்கள் மீது பயங்கர வேகத்தில் மோதியது என்றார்கள்.

சிசிடிவி காட்சி: இந்நிலையில் இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வளைவில் வேகமாக வந்த ஹோண்டா ஸ்போர்ட்ஸ் கார், திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்தது. அப்படியே அசுர வேகத்தில் தாறுமாறாக சென்று அந்த கார் பெண்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் அடுத்த சில நொடிகளிலேயே உயிரிழந்தனர். மோசமான இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் பார்ப்போரை நடுங்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+