விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா.. காரின் முன்பகுதியில் கடும் சேதம்! திடீர் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் காரின் முன்புறம் சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பா வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலத் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் இன்று திடீரென விபத்தில் சிக்கியது. ஜோகுலம்பா கடவால் மாவட்டம் உண்டவள்ளி அருகே விஜய் தேவரகொண்டா கார் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளது.

Tollywood actor Vijay Deverakonda Escapes Unhurt as his luxary Lexus Car Crash Near Undavalli

விஜய் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த போலிரோ கார் திடீரென வலதுபுறம் திரும்பிய நிலையில், அது விஜய் தேவரகொண்டாவின் லெக்ஸஸ் கார் மீது மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

போலிரோ கார் திடீரெனத் திரும்பியதே விபத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. விபத்து நடந்தபோது நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த காரில் தான் இருந்துள்ளார்.. அதேநேரம் இந்த விபத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லையாம். விபத்துக்குப் பிறகும் அவர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறிய விபத்து தான் என்றும் காரில் பணித்த அனைவரும் பாதுகாப்பாகவே இருப்பதாக விஜய் தேவரகொண்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுடன் திருமணம் குறித்த நிச்சயதார்த்தம் சமீபத்தில் தான் நடந்தது. கடந்த அக்டோபர் 3ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் நடந்த நிச்சயதார்த்தம் ரகசியமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்த ஜோடி 2026 பிப்ரவரி மாதம் வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விஜய் அல்லது ரஷ்மிகா இதுவரை நிச்சயதார்த்தம் அல்லது திருமணத் திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+