குஜராத்தியில் மோடிக்கு ட்வீட்.. உருது மொழியில் பதிலடி தந்த பாஜக.. உக்கிரமாகும் சண்டை - பின்னணி என்ன?
ஹைதராபாத் : சந்திரசேகர் ராவின் டிஆர்எஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து, பிரதமர் மோடிக்கு குஜராத்தி மொழியில் சில ட்வீட்டுகள் பதிவிடப்பட்டதற்கு தெலுங்கானா மாநில பாஜக, உருது மொழியில் பதில் அளித்துள்ளது.
Recommended Video
டிஆர்எஸ் கட்சி, தெலுங்கானா அரசின் சாதனைகளை குஜராத்தி மொழியில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அரசின் குறைகளை உருது மொழியில் பதிவிட்டுள்ளது தெலுங்கானா பாஜக.
சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடி இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், ட்விட்டரில் இரு கட்சிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மோதல்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

தெலுங்கானா
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் பாஜக 3 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கிறது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் பிரதமர் மோடிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. சந்திரசேகர் ராவ் தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து வருகிறார். தெலுங்கானா பாஜகவும் கே.சி.ஆர் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.

மோடியை விமர்சிக்கும் கேசிஆர்
சமீபத்தில் பாஜக செயற்குழுவில் பங்கேற்பதாக ஹைதராபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தெலுங்கானா முதல்வரான சந்திர சேகர் ராவ் செல்லவில்லை. அவரது சந்திப்பை வேண்டுமென்றே கேசிஆர் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி 3 முறை தெலுங்கானா சென்றுள்ளார். இந்த 3 முறையும் பிரதமர் நரேந்திர மோடியை, சந்திர சேகர் ராவ் வரவேற்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு விருப்பமான மொழியில்
இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு குஜராத்தி மொழியில் சில ட்விட்டர் பதிவுகள் இடப்பட்டன. அதில், தெலுங்கானாவில் டிஆர்எஸ் அரசு செய்த வளர்ச்சித் திட்டங்களை மோடிஜியும் அவரது கட்சியும் அங்கீகரிக்கத் தவறிவிட்டனர். பிரதமரின் விருப்பமான மொழியில் தெலுங்கானாவின் சாதனைகள் இதோ எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தனர்.

டிஆர்எஸ் குஜராத்தி ட்வீட்
வழக்கமாக தெலுங்கு மொழியில் பதிவிடப்படும் டிஆர்எஸ் ட்விட்டர் பக்கத்தில் குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்ட பதிவுகளில், 13 விஷயங்களை குஜராத்தி மொழியில் குறிப்பிட்டிருந்தது டிஆர்எஸ் கட்சி. இந்தியப் பொருளாதாரத்தில் நான்காவது பெரிய பங்களிப்பாளராக தெலுங்கானா உள்ளது, தெலுங்கானா தனிநபர் வருமானத்தில் அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது, வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் விவசாயிகளுக்கு 24/7 இலவச மின்சாரம் வழங்கும் இந்தியாவின் ஒரே மாநிலம் என்பது உள்ளிட்ட பதிவுகள் இடப்பட்டுள்ளன.

உருது மொழியில் பதில்
அதற்கு உருது மொழியில் அந்த மாநில பாஜக பதிலளித்துள்ளது. பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், சந்திரசேகர் ராவும், தாருஸ்ஸலாம் சூப்பர் சி.எம்.மும் அவர்களுக்கு விருப்பமான மொழியில் சொன்னால் கேட்பார்களா என்று பார்ப்போம் எனக் குறிப்பிட்டு உருது மொழியில் பதில் அளித்துள்ளது பாஜக. ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடன் டி.ஆர்.எஸ் கட்சி நட்பு பாராட்டி வருவதைக் குறிக்கும் வகையில் பாஜக உருது மொழியில் ட்வீட் செய்துள்ளது. இந்த விவகாரம் தெலுங்கானா மாநில அரசியலில் பரபரப்பு விவாதமாகியுள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications