சல்லி சல்லியாக நொறுக்கிட்டீங்களேடா.. ஹைதராபாத் லுலு மால் பரிதாபங்கள்.. இரக்கம் இல்லையா உங்களுக்கு?
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி புதிதாக லுலு மால் திறக்கப்பட்ட நிலையில், அங்கு என்னப்பா பண்ணிவச்சிருக்கீங்க என்று கேட்கும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தள்ளது. உணவு பொருட்களை கண்டபடி காசு கொடுக்கமால் தின்றுவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள். பாதி தின்ற நிலையில் உணவு பொருட்கள் அங்கு சிதறி கிடந்தன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்த லுலு மால், தெலுங்கானாவின் ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவால் செப்டம்பர் 27, 2023 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவில் லுலு குழுமத்தால் திறக்கப்பட்ட ஆறாவது லுலு மால் இதுவாகும்.

ஏற்கனவே லக்னோ, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் லுலு மால்கள் இருக்கின்றன. இப்போது ஹைதராபாத்தில் லுலு மால் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த மால் இந்தியாவின் மிகப்பெரிய மால் என்கிற இடத்தை பிடித்திருக்கும் என்கிறார்கள் ஹைதராபாத்வாசிகள். ஏனெனில் அந்த அளவிற்கு மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டிருந்தது.
பொதுவாக நம்மூர்களில் உள்ள டிமார்ட் ஸ்டோர்கள் போலவே இந்த மாலில் எல்லா பொருட்களுமே கிடைக்கும். டிமார்ட் போலவே இருக்கும் இந்த மாலை காண ஹைதராபாத்வாசிகள் பலரும் செப்டம்பர் 27ம் தேதி ஆர்வம் காட்டினார்கள். இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது.
கட்டுக்கடங்காத கூட்டத்தை லுலு மால் ஊழியர்களுக்கு இன்று நல்ல வேட்டை என்று பெரிய அளவில் சந்தோஷப்பட்டனர். ஆனால் நடந்தது என்னவோ வேறு மாதிரி இருந்தது.கட்டுக்கடங்காத கூட்டத்தில் வந்த பலர் காற்றுவாங்க வந்தவர்களாகவும்,சிலர் காசு கொடுக்காமல் உணவு பொருட்களை கண்டபடி தின்றுவிட்டு போனவர்களாகவும் இருந்தார்கள். நம்மூர் டிமார்ட்களில் யாராவது சிறு பிள்ளைகள் தெரியாமல் சாக்லேட் பாக்கெட்டை பிய்த்துவிட்டாலே கண்டுபிடித்து அவர்களை பில் போட சொல்வார்கள். நம்மவர்களும் கடைசியில் பில்போடும் போது மறக்காமல் பில் போட்டுவிட்டுத்தான் போவார்கள். ஏமாற்ற மாட்டார்கள்.
ஆனால் லுலு மாலில் அன்று நடந்த சம்பவம் மறக்க முடியாதது. பலரும் நம்மை யார் பார்க்க போகிறார்கள். யார் கேட்க போகிறார்கள் என்று சிப்ஸ் பாக்கெட் முதல் கூல்ட்ரிங்ஸ் பாக்கெட் வரை எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்துவிட்டார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக யார் சாப்பிட்டார்கள், யார் பொருட்களை எடுக்கிறார்கள் என்று கணிக்கவே முடியாத நிலைக்கு லுலுமால் ஊழியர்கள் தள்ளப்பட்டார்கள்.
பாதி சாப்பிட்டு போட்ட பிரெட்கள், பிஸ்கெட் பாக்கெட்கள், சாக்லெட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், ஐஸ்கிரீம் டாப்பாக்கள், சாக்லேட் கவர்கள், சிப்ஸ் கவர் என எல்லா உணவு பொருட்களையும் பிரித்து மேய்ந்துவிட்டு போய் இருக்கிறார்கள். ஒருவரா இருவரா எத்தனை பேர் இப்படி செய்தார்கள் என்பது எண்ணவே முடியாது என்பதால், லுலு மால் ஊழியர்கள், என்னடா வந்த முதல் நாளே இப்படி ஆயிடுச்சே வடிவேலு பாணியில் சோகமாகினர்.
எனினும் சாப்பிட்டு போட்டவர்கள் குறித்து சிசிடிவி வீடியோக்கள் எதையும் லுலுமால் ஊழியர்கள் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் மாலில் நடந்த கூத்துகளை பலரும் வீடியோ எடுத்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள். பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு சொல்லுவாரே சல்லி சல்லியாக நொறுக்கிட்டீங்களேடா என்று அப்படித்தான் இருந்தது லுலுமால். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது. நீங்களே பாருங்கள்.
https://x.com/IamPadmaSri/status/1708872577383588183?s=20 https://twitter.com/i/status/1709058614680309979-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications