ஒரு துளி பந்தா இல்லை.. பாதுகாப்பிற்கும் யாரும் இல்லை.. எகானமி கிளாஸில் ரஜினி! வியந்துபோன சக பயணிகள்
ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் விமானத்தில் மிக எளிமையாக எகானமி வகுப்பில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் ரஜினி இப்போது படு பிஸியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். 'ஜெய் பீம்' புகழ் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.. ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து ரஜினிகாந்த் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது ரஜினிகாந்த் எகானமி வகுப்பில் ஏறியது பயணிகள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இது தொடர்பான வீடியோவை விமானத்தில் பயணித்த ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். விமானத்தில் இருந்த தீவிர ரசிகர் ஒருவர் அந்த வீடியோவை எடுத்துள்ளார், அதில் அந்த நபர் ரஜினிகாந்த்துடன் ஒரு சில வார்த்தைகள் பேசுகிறார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த அந்த நபர், "கடவுளுக்கு மிகவும் நெருக்கமாக நான் இருந்தேன்" என்று கூறியிருக்கிறார்.
பின் வரிசை: அதேபோல கடப்பா விமான நிலையத்தில் எடுத்த மற்றொரு வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த் வெகு சாதாரணமாகத் தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். அதுவும் முன்வரிசையில் கூட அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இரண்டு இருக்கை கொண்ட அந்த விமானத்தில் ரஜினி காந்த் மிகச் சாதாரணமாக பின் வரிசையில் ஒரு விண்டோ சீட்டில் அவர் அமர்ந்துள்ளார்.

அங்கே அவர் தனது ஏர்போட்களுடன் ஃபிட் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் ஜன்னலோர இருக்கைக்கு அருகே நீல நிற சட்டை மற்றும் பழுப்பு நிற பேன்ட் அணிந்து அமர்ந்திருந்தார். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த், விமானத்தில் இவ்வளவு எளிமையாகவும் சாதாரணமாகவும் பயணித்தது அங்குள்ள பயணிகளிடையே மிக அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
சூறாவளி சுற்றுப் பயணம்: 73 வயதாகி இருந்தாலும், ரஜினிகாந்த் சூறாவளி போல சுற்றி சுற்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட அவர் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார். அந்த வீடியோவும் இணையத்தில் டிரெண்ட் ஆனது. அதேபோல சமீபத்தில் 'வேட்டையன்' படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் போலீஸ் சீருடையில் காரில் வந்திருந்தார். அந்த வீடியோவும் இணையத்தில் தீயாக பரவியது.

இந்த 'வேட்டையன்' திரைப்படத்தில் அவர் முஸ்லீம் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. 'வேட்டையன்' படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இந்த படம் மார்ச் அல்லது சம்மரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்குப் பிறகு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை சன் பி்க்சர்ஸ் தயாரிக்கிறது. அடுத்தாண்டு இந்த திரைப்படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications