பனியனை பிடித்து.. தலைமுடியை இழுத்த "ராங்ரூட்" பெண்.. அலங்கோலமாகிவிட்ட டிரைவர்.. பஸ்ஸூக்குள் சூறாவளி

பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய பெண்ணின் வீடியோ வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அரசு ஊழியர் என்றும் பாராமல், ஒரு பஸ் டிரைவரை பட்டப்பகலில் வெளுத்து வாங்கிவிட்டார் அந்த பெண்.. இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.

விஜயவாடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. பகல் நேரத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் பல சென்று கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் அரசு பஸ் ஒன்றும் ஏராளமான பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது.. அப்போது எதிரே ஒரு பெண் ஸ்கூட்டியில் வந்துள்ளார்.

 ராங்ரூட்

ராங்ரூட்

ஆனால் ராங் ரூட்டில் வந்துள்ளார்.. இதனால், எதிரில் வந்து கொண்டிருந்த அரசு பஸ் லேசாக ஸ்கூட்டியில் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டது.. லேசாகத்தான் மோதியது.. அதற்கே அந்த பெண் கொந்தளித்துவிட்டார். பஸ்ஸை எடுக்க விடாத அளவுக்கு அதற்கு முன்பு ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, ஆவேசமாக பஸ்ஸூக்குள் ஏறினார்.. அரை மணி நேரம் இருக்கும்.. பஸ்ஸூக்குள்ளேயே சாமியாடிவிட்டார்..

 ஆவேசம்

ஆவேசம்

அசிங்க அசிங்கமாக டிரைவரை திட்டினார்.. அப்போதும் ஆத்திரம் அடங்காமல், டிரைவரின் சட்டையை பிடித்து இழுத்தார்.. பிறகு பனியனை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கினார். இதை பார்த்து பஸ்ஸில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்..அந்த பெண்ணை தடுத்து நிறுத்த முயன்றனர்.. ஆனால் அவரை யாராலும் கன்ட்ரோல் செய்யவே முடியவில்லை.. அதற்குள் தகவலறிந்து போலீசார் அங்கு வந்துவிட்டனர்..

 காலால் உதைத்தார்

காலால் உதைத்தார்

போலீசாரை பார்த்ததும் ஓரளவு அமைதியாவார் என்று பார்த்தால், அப்போதுதான் தன்னுடைய குரலை இன்னும் அதிகமாக உயர்த்தினார்.. அதுமட்டுமல்ல, டிரைவரை காலால் எட்டி உதைத்தார்.. பனியனை பிடித்து இழுத்து, கீழே இறங்குடா என்று கத்தினார். இவ்வளவும் நடக்கும் வரையில் டிரைவர் வாயே திறக்கவில்லை.. அமைதியாக இருந்தார்.. அவரது தலைமுடி எல்லாம் கலைந்து போயிருந்தது.. யூனிபார்ம் அலங்கோலமாகிவிட்டது..

 புகார்

புகார்

கடைசியாக, அந்த டிரைவர் போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.. போக்குவரத்து விதிகளை மீறி ராங்-ரூட்டில் வந்ததுமில்லாமல், டிரைவரையும் போட்டு தாக்கிய வீடியோ, அதற்குள் சோஷியல் மீடியாவில் பரவிவிட்டது. இப்போது வரை அதுதான் நேற்றில் இருந்து வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+