விஜய் தேவரகொண்டாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தற்போது அவர் ‛கிங்டம்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 31ம் தேதி ரிலீசாக உள்ளது.

இதனால் படத்தின் புரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். மாத்திரை, மருந்துகள் எடுத்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார். டெங்கு காய்ச்சல் குணமாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜய் தேவரகொண்டா இன்னும் சில நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது விஜய் தேவரகொண்டா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இருப்பினும் கூட அவரது ‛கிங்டம்' திரைப்படம் ரிலீசுக்கு முன்பு அவர் உடல்நலம் தேற வாய்ப்புள்ளதாக குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.அதன்படி அவர் வரும் 20ம் தேதிக்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா நடித்து ரிலீசுக்கு தயாராகி உள்ள இந்த ‛கிங்டம்' திரைப்படத்தை இயக்குநர் கவுதம் தின்னனுரி இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் ஆக் ஷன் திரைப்படமாகவும், சிங்கள- தமிழர் மோதலின் பின்புலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் மூலமாக அகதிகள் பிரச்சனையை எடுத்து கூற முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த திரைப்படம் மே 30ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஜூலை 4ம் தேதிக்கு படம் தள்ளிப்போனது. இப்போது ஜூலை 31ம் தேதி திரைப்படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications