பாஜகவில் இணைந்த விஜயகாந்த், சரத்குமார் பட நடிகை! தெலுங்கானா அரசியலில் குதித்தார்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: விஜயகாந்த், சரத்குமார் படங்களில் நடித்துள்ள நடிகை ஆமனி, பாஜகவில் இணைந்துள்ளார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள அவர், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தெலுங்கானா பாஜகவில் இணைந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஆமனி (52). இவர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான நாகர்ஜூனா, பாலகிருஷ்ணா, ஜெகபதி பாபு உள்பட பலருடன் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசன் உடனும் நடித்துள்ளார்.

BJP telangana cinema

தமிழ் திரையுலகிலும் சரத் குமார் உடன் தங்கமான தங்கச்சி, விஜயகாந்த் உடன் ஆனஸ்ட்ராஜ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் ஆமனி. இவர் தற்போது தெலுங்கில் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழ் சினிமா தயாரிப்பாளர் காஜா மொய்தீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1992-ல் வெளியான முதல் சீதனம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, தெலுங்கானா பா.ஜ.க தலைவர் ராமசந்திர ராவ் ஆகியோர் முன்னிலையில் நடிகை ஆமனி பாஜகவில் இணைந்தார். அவருடன் பிரபல மேக் அப் ஆர்டிஸ்ட் சோபா லதாவும் பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+