என்னா அடி.. அங்க பாருங்க.. ஒருத்தன் சேரை தூக்கி எங்க அடிக்கிறான்னு.. கல்யாண கலாட்டா.. வைரல் வீடியோ!
கல்யாண வீட்டில் நடந்த சண்டை வைரலாகி வருகிறது
Recommended Video
ஹைதராபாத்: கல்யாண வீடு: பட்டுப்புடவை கட்டின ஆண்ட்டிகளும், கோட்-சூட் போட்ட அங்கிள்களும் சும்மா பறந்த பறந்து அடித்து கொண்டனர் . இதனால் கல்யாண வீடே ரணகளமாகிவிட்டது.
தெலுங்கானா மாநிலம் சூரியாபேட்டையில் உள்ள தொகராய் என்னும் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று மாலை அங்குள்ள ஒரு வீட்டில் ரிசப்ஷன் வைத்திருக்கிறார்கள்.
அந்த தெருவே கல்யாண களை கட்டியது. ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் ரிசப்ஷன்களில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

பாட்டு கச்சேரி
இதில் மாப்பிள்ளை ஊர்வலம் அழைப்பிற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்திருந்தனர். ஆனால் மாப்பிள்ளை அழைப்பிற்காக பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யவில்லை என தெரிகிறது. பாட்டு சத்தமே அங்கு கேட்காததால், மது போதையில் இருந்த மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் பாட்டு கச்சேரி எங்கே என்று கேட்டு தகராறு செய்துள்ளனர்.

களேபரம்
இந்த தகராறுதான் பெரிய களேபரமாகிவிட்டது.. சேர், டேபிள்களை தூக்கி இரு வீட்டினரும் அடித்து கொண்டனர். பட்டுப்புடவை, பூ, என மங்கலகரமாக வந்திருந்த பெண்கள் எல்லாம் தூக்கி செருகிக்கொண்டு களத்தில் குதித்து, அவர்களின் பங்களிப்பையும் காட்டினர். கையில் கிடைத்த பாத்திரங்களை எடுத்து எதிர்தரப்பை அடிக்க பாய்ந்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாகி விட்டது.

கல்யாண பெண்
ஒரு சிலருக்கு மண்டையில் ரத்தம் வழிகிறது.. இன்னொருத்தர் கொலை வெறியில் இருக்கிறார்.. அவரை நான்கைந்து பேர் இழுத்து பிடித்து அடக்குகிறார்கள்.. ஒரு கட்டத்தில் கல்யாண பொண்ணே சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார். யார், எதற்காக அடித்து கொள்கிறார்கள் என்றுகூட தெரியாமல் பரிதாபமாக விழித்து கொண்டு நின்றார்.
|
வீடியோ
ஆனால் இந்த கல்யாணத்துக்கு வந்தவர்களில் தம் கடமையை செவ்வனே செய்தது வீடியோ எடுப்பவர்கள்தான்.. கல்யாண வீடியோ எடுக்க வந்தவர்கள், இந்த சண்டை காட்சியை வளைச்சு வளைச்சு வந்து வீடியோ எடுத்து கொண்டனர். ஊர் பெரியவர்கள்தான் இதில் தலையிட்டு பிரச்சனையை அடக்கி இருக்கிறார்கள். அடிபட்ட எல்லாரும் இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறார்களாம். இந்த ரணகள வீடியோ வைரலாகி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications