"பச்சை துரோகம்".. இந்த காயத்ரியை பார்த்தீங்களா.. ரூமில் ஏற்கனவே 4 "காம பிசாசுகள்".. அலறிய இளம் பெண்

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய காரணமாக இருந்த பெண் கைதாகி இருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனக்கு துரோகம் செய்த காரணத்தினால், இளம்பெண் காயத்ரி, இப்படியான செயலையும் துணிந்து செய்வாரா? என்ற அதிர்ச்சி கேள்வி எழுகிறது.

கணவனுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் பெண்ணை கூலிப்படை ஏவி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. கோண்டாப்பூரை சேர்ந்தவர்தான் அந்த காயத்ரி.. கணவனுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி கொண்டிருந்தார்.

 கள்ளக்காதல்

கள்ளக்காதல்

கணவனும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார்.. அப்போதுதான், இவர்களின் வாழ்வில் இன்னொரு பெண் குறுக்கிட்டார். அந்த பெண்ணும் அதே பகுதியை சேர்ந்தவராம்.. அவரும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தாராம்.. அப்போதுதான், கணவனுக்கும், இந்த பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.. இந்த நட்பு அப்படியே கள்ளக்காதலாக கன்வெர்ட் ஆகிவிட்டது.. இந்த விஷயம் எதுவுமே தெரியாத காயத்ரியோ, அந்த பெண்ணுடன் அன்பாக பழகிவந்தார்.. மிகுந்த நெருக்கம் காட்டினார்.. தன் குடும்ப உறவாகவே, அந்த பெண்ணையும் கருதினார்..

 பச்சை துரோகம்

பச்சை துரோகம்

ஒருநாள், காயத்ரிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால், உதவிக்காக அந்த பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.. அப்போது இந்த கள்ளக்காதல் ஜோடி, காயத்ரியிடம் கையும் களவுமாக சிக்கி கொண்டது.. இதனால் அதிர்ந்து போனார் காயத்ரி.. கணவன் மீதும், அந்த பெண்ணின் மீதும் அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வைத்திருந்ததால், இந்த துரோகத்தை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.. அதனால், இருவரிடமும் கொந்தளித்தார்.

 துணியால் வாய் பொத்தினர்

துணியால் வாய் பொத்தினர்

அப்போதும் அவர் ஆத்திரம் தீரவில்லை.. அதனால், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி போலீசாரிடம் புகார் தந்தார்.. அப்போதும் அவர் ஆத்திரம் தீரவில்லை.. அந்த பெண்ணை பழிவாங்குவது என்ற முடிவுக்கு வந்தார்.. நேரடியாகவே தானே கொலையை செய்யாமல், இதற்காகவே கூலிப்படையை அணுகினார்.. அவர்களிடம் பேரம் பேசி, தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்களை ஒரு ரூமில் தங்க வைத்தார். பிறகு, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு போனை போட்டு, போலீசில் தந்த புகாரை வாபஸ் பெற போகிறேன் என்று சொல்லி வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

 ரிக்கார்ட் செய்த காயத்ரி

ரிக்கார்ட் செய்த காயத்ரி

காயத்ரியின் பேச்சை கேட்டு, அந்த பெண்ணும் வீட்டிற்கு வந்துள்ளார்.. அவரை நைஸாக பேசி, கூலிப்படையினர் இருக்கும் ரூமிற்கு அழைத்து சென்றார் காயத்ரி.. அதுமட்டுமல்ல, அங்கிருந்த கூலிப்படையினரிடம், அந்த பெண்ணை துணியால் வாயை பொத்தி, பாலியல் வன்கொடுமை செய்யுமாறும் சொல்லி உள்ளார்.. அதுமட்டுமல்ல, இந்த நிகழ்வுகள் அத்தனையும் காயத்ரி தன்னுடைய செல்போனிலும் ரிக்கார்ட் செய்து கொண்டார்.

 ஹைதராபாத்

ஹைதராபாத்

இறுதியில், கூலிப்படையினர் தாக்கியதில் படுகாயமடைந்தார் அந்த பெண்.. இந்த விஷயம் கேள்விப்பட்டு, அந்த பெண்ணை மீட்டு அருகில் இருந்தோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்... இந்த புகாரின்பேரில் காயத்ரியையும் அந்த கூலிப்படையை சேர்ந்த 4 இளைஞர்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்... இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இருந்தாலும், இந்த குற்றத்தில் சம அளவுக்கு பங்குடைய, கணவனுக்கு, எந்த தண்டனையையும் காயத்ரி ஏன் தரவில்லை என்று தெரியவில்லை....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+