Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுருண்டு விழும் இளைஞர்கள்.. பேட்மிண்டன் விளையாடி வாலிபர் பலி! அலறவிடும் SAC மாரடைப்பு! 6ஆவது மரணம்

பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்தியாவில் சமீப காலமாக திடீர் திடீரென இளைஞர்கள் சரிந்து விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இப்போது ஆறாவது முறையாக இதுபோல ஒரு உயிரை நாம் இழந்துள்ளோம்.

மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் நாம் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம்.. இதனால் முன்பு அரிதாக ஏற்பட்ட பாதிப்புகளும் இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக இப்போது ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அது பல விதமான பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்துகிறது. இது சில நேரங்களில் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் பலி

பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் பலி

அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பேராசிரியர் ஜெயசங்கர் உள்விளையாட்டு அரங்கில் 38 வயதான ஒருவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். தெலுங்கானாவில் கடந்த இரண்டு வாரங்களில் இதுபோல நடக்கும் ஐந்தாவது சம்பவம் இதுவாகும். இப்போது உயிரிழந்துள்ள இந்த நபர் ஹைதராபாத் மல்காஜ்கிரி புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த ஷியாம் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிசிடிவி

சிசிடிவி

இந்த அதிர்ச்சி சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. அந்த பேட்மிண்டன் மைதானத்தில் ஷியாம் யாதவ் தரையில் படுத்துக் கிடப்பதும் அப்போது அருகே வரும் பலரும் அவர் மூச்சு விடுகிறாரா என்று பார்ப்பதும் அதில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. மயங்கி விழுந்த உடன் அவருக்கு உயிர்காக்கும் சிபிஆர் வழங்கப்பட்டிருந்தால் அவர் காப்பாற்றி இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஷியாம் பேட்மிண்டன், கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் தொடர்ந்து ஆர்வமாகப் பங்கேற்ற நபர் என்று சொல்லப்படுகிறது.

அதிகரிக்கும் ஷாக் சம்பவம்

அதிகரிக்கும் ஷாக் சம்பவம்

அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், வேலை முடிந்து தினமும் மைதானத்திற்குச் சென்று விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நன்றாக இருந்த அவர் திடீரென இப்படி உயிரிழக்க என்ன காரணம் என்று தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சமீபத்திய சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது, அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நமது நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்கள் இப்படி திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

19 வயது இளைஞர்

19 வயது இளைஞர்

தெலுங்கானாவில் மட்டும் கடந்த 15 நாட்களில் இதுபோன்ற மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் நடப்பது ஐந்தாவது முறையாகும். இதற்கு முன் தெலுங்கானாவில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டம் பார்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. அதேபோல பிப். 20இல் ஹைதராபாத்தில் ஹல்தி விழாவில் பங்கேற்ற ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த வீடியோவும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

போலீஸ்காரர் பலி

போலீஸ்காரர் பலி

அதேபோல கடந்த பிப். 23ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்த 24 வயது போலீஸ் கான்ஸ்டபிள் மாரடைப்பு காரணமாகப் பலியானார். மேலும், கடந்த பிப். 24ஆம் தேதி ஹைதராபாத்தில் பஸ்ஸைப் பிடிக்கக் காத்திருந்த ஒருவர் திடீரென நெஞ்சு வலியால் அப்படியே சரிந்தார். இருப்பினும், நல்வாய்ப்பாக அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அவருக்கு சிபிஆர் செய்து அவரது உயிரைக் காப்பாற்றினார். அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவிலும் திருமன விழாவில் நடமாடிய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிபிஆர்

சிபிஆர்

இது தொடர்பாக டாக்டர் மருத்துவர்கள் கூறுகையில், "சிபிஆர் குறித்து அனைத்து மக்களுக்கும் நாம் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் நம்மால் பலரை காப்பற்ற முடியும். ஒருவருக்கு திடீரென இதயம் செயலிழந்தால் சிபிஆர் அளித்துக் காப்பாற்ற முடியும். நிமிடத்திற்கு 100 முறைக்கு மேல் மார்பில் அழுத்தும் நுட்பமே இந்த சிபிஆர் ஆகும். வளர்ந்த நாடுகளில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் சிபிஆர் தெரிந்த ஒருவர் எப்போதும் இருப்பார்கள். திடீரென யாருக்காவது இதய செயலிழப்பு ஏற்பட்டால்.. அந்த நபர் அவர்களைக் காப்பாற்றுவார். அதுபோன்ற நடைமுறைகளையும் நாம் பின்பற்றலாம்" என்றார்.

திடீர் மாரடைப்பு

திடீர் மாரடைப்பு

இதை மருத்துவர்கள் Sudden Cardiac Arrest (SCA) என்று குறிப்பிடுகின்றனர். இதயத்தில் ஏற்படும் சின்ன மின்சார சிக்னல்தான் இதயம் துடிக்கக் காரணம். இவை திடீரென நின்றால் இதயத் துடிப்பும் நின்றுவிடும்.. இப்படி இதய துடிப்பிற்கான மின்சார அலைகள் நிற்பதே Sudden Cardiac Arrest (SCA) என்று அழைக்கப்படும் இதுவே சமீபத்தில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை பார்ப்பது. சர்க்கரை நோய், மது குடிப்பது புகை பிடிப்பது, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+