பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவை காணோமாமே.. குண்டை தூக்கி போட்ட "மிஸ்ஸிங்" புகார்.. என்னாச்சு அவருக்கு?

பிரபல நடிகர் பாலகிருஷ்ணா காணவில்லை என்று மீண்டும் புகார் தரப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்துபுரம் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணாவுக்கு எதிரான புகார்கள் குவிந்து வருவதால், அவரது ரசிகர் மன்றம் சார்பில் போலீசில் இது தொடர்பாக மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணனா.. இவர் தன்னுடைய 14 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.

பாரம்பரியமான சினிமா பின்னணி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், தன்னுடைய முதல் படத்தில் இருந்தே எதிர்பார்ப்புகளையும் ஆதரவுகளையும் ரசிகர்களிடம் பெற்று வருபவர்.

 பிரபல நடிகர்

பிரபல நடிகர்

1980களிலிருந்து இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்... இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் பாலய்யா நடித்துள்ளார். தற்போது நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்... இதற்கு நடுவில் அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்தார்.. தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து கட்சியின் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்... குழந்தையில் இருந்தே பார்த்த ஸ்டார் என்பதாலும், அவரது குடும்ப பின்னணியில் உள்ள அபரிமிதமான நம்பிக்கையாலும், அந்த தொகுதி மக்கள் இவரை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்தனர்..

 டபுள் டைம்

டபுள் டைம்

2 முறையும் இந்துபுரம் தொகுதியின் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், சமீபகாலமாகவே, இவர் தொகுதி பக்கம் வருவதே இல்லை என்ற புகார் கிளம்பியது.. தங்கள் எம்எல்ஏவை காணோம் என்று, போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரும் நிலைமைக்கும் தொகுதி மக்கள் சென்றுவிட்டது அதிர்ச்சியை கிளப்பியது.. தொகுதியை சரியாக கவனிப்பதில்லை என்றும், தொகுதி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில்லை என்றும், அதனால் தங்கள் எம்எல்ஏவை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் கடந்த முறையே புகார்களை தொகுதி மக்கள் சொன்னார்கள்..

மிஸ்ஸிங்

மிஸ்ஸிங்

இப்படி ஒரு புகார் தன்மீது ஸ்டேஷன் வரை சென்றதால், பாலகிருஷ்ணன் தரப்பில் காரணம் ஒன்று சொல்லப்பட்டது.. ஷூட்டிங் பிஸியில் மும்முரமாக இருப்பதால்தான் தொகுதி பக்கம் வரமுடியவில்லை என்று கூறினார்கள்.. ஆனால், 2-வது முறையாக எம்எல்ஏவாக தேர்வாகியும் தொகுதியில் நிலவும் பிரச்னை மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மீண்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பாலகிருஷ்ணா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.. பாலகிருஷ்ணாவுக்கு அரசியல் பழக்கப்படாமல் இல்லை.. அவருடைய அப்பா என்டிஆர் ஆந்திர முதல்வராக பணியாற்றியுள்ளார்.

 2 இன்னிங்ஸ்

2 இன்னிங்ஸ்

பாலகிருஷ்ணா அரசியல் பின்னணியிலிருந்து தான் வந்துள்ளார். இப்படி இருக்கையில் இந்த புகார்கள் அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... எனினும் புகார் மேல் புகார்கள் பாலகிருஷ்ணா மேல் ஸ்டேஷனுக்கு சென்றுகொண்டிருப்பதால், அவரது ரசிகர் மன்றத்தினரே ஸ்டேஷனில் மறுபடியும் புகார் தெரிவித்துள்ளனர்.. விளக்கங்கள்தான் தரப்படுகிறதே தவிர, தங்கள் பிரச்சனைகள் தீராமலேயே உள்ளது என்று தொகுதி மக்கள் நொந்து கொள்கிறார்கள்.. தங்கள் எம்எல்ஏ பிரச்சனைகளை தீர்ப்பாரா? பாலகிருஷ்ணா எங்கதான் போயிருப்பார்? என்று காத்திருக்கிறார்கள் இந்துபுரம் மக்கள்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+