Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Miss World: 16 வயதில் நடந்த சர்ஜரி.. கேன்சரில் இருந்து மீண்ட உலக அழகி.. யார் இந்த ஓபல் சுச்சாட்டா?

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: 2025ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்துக்கு தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அழகியான ஓபல் சுச்சாட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறு வயதிலேயே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், 16 வயதிலேயே சர்ஜரி செய்து கொண்டு, அதற்கு எதிரான விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டார். 22 வயதான ஓபல் சுச்சாட்டா கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்றிரவு உலக அழகி போட்டிக்கான இறுதிச்சுற்று நடைபெற்றது. மே முதல் வாரம் முதலே உலக அழகி போட்டி நடந்து வருகிறது. அப்போது முதல் ஒவ்வொரு சுற்றாக போட்டிகள் நடந்த நிலையில், ஒரு பக்கம் விளம்பர பணிகளும் நடந்தன. இறுதியாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அழகியான ஓபல் சுச்சாட்டா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

miss world opal Suchata chuangsri hyderabad

பரிசுத்தொகை

தாய்லாந்தில் இருந்து உலக அழகி பட்டத்தை வென்ற முதல் நபர் ஓபல் சுச்சாட்டா தான். இவருக்கு இந்திய மதிப்பில் ரூ.8.5 கோடி பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. உலக அழகி பட்டத்தை வென்ற ஓபல் சுச்சாட்டாவுக்கு கடந்த ஆண்டு பட்டத்தை வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா மகுடம் சூட்டி பாராட்டினார். இந்த உலக அழகி போட்டியின் இறுதிச்சுற்றில் ஓபல் அணிந்திருந்த ஆடை பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஓபல் சுச்சாட்டாவின் ஆடை

ஓபல் என்பது ரத்தின கல்லாகும். இவரது பெயரும் ஓபல் என்பதால், இந்த உயரத்திற்கு வருவதற்கும், தனது பயணத்தை குறிக்கும் வகையிலும் "Opal For Her" என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஆடை உருவாக்கப்பட்டிருந்தது. வெள்ளை நிறத்தினாலான ஆடையில் இருந்த புகைப்படத்தை பதிவிட்ட ஓபல், ஓபல் ரத்தினக் கல்லை போல் எனது சொந்த ஒளியில் நானும் பிரகாசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

யார் இந்த ஓபல் சுச்சாட்டா?

ஓபலின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவரான இவர், 2003ஆம் ஆண்டு பிறந்தவர். தாய், சைனீஸ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் உரையாடக் கூடியவர். பாங்காக்கில் உள்ள பள்ளியில் படித்த அவர், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பட்டப்படிப்பை படித்து வருகிறார்.

மார்பக புற்றுநோய் பாதிப்பு

16 வயதிலேயே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், தொடக்க நிலையிலேயே அடையாளம் கண்டு அதற்கான சிகிச்சையை எடுத்து கொண்டவர். இதன்பின் மார்பக புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் செய்து வந்துள்ளார். உலக அழகி பட்டத்தை வெல்வதற்கான பயணத்தை 2021ஆம் ஆண்டிலேயே தொடங்கி இருக்கிறார்.

பிரபஞ்ச அழகி பயணம்

2021ல் மிஸ் ரட்டனகோசின் பட்டத்தை வென்ற அவர், 2022ல் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்றார். அதில் 3வது இடத்தை பிடித்தார். ஆனால் 2வது இடம் பிடித்த நிகோலின் ராஜினாமா செய்வதாக அறிவித்ததால், ஓபல் 2வது இடத்திற்கு முன்னேறினார். இதன்பின் 2024ஆம் ஆண்டு முதல் உலக அழகி போட்டிக்கான பயணம் தொடங்கி இருக்கிறது.

கடைசி சுற்று

கடைசி சுற்றில் நடிகர் சோனு சூட், உங்களின் வாழ்க்கை பயணம் என்ன விஷயத்தை சொல்கிறது, உங்களின் தனிப்பட்ட பொறுப்பு என்று எதனை உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபல் சுச்சாட்டா, நம் மீது அன்பு செலுத்துவோர் மதிக்கும் வகையில் நமது செயல்பாடுகளும், பண்புகளும் இருக்க வேண்டும் என்பதை என் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொண்டேன். வாழ்வில் எந்த உயரத்திற்கு சென்றாலும், நம்மைவிடவும் செயலே அதிகம் பேச வேண்டும் என்று தெரிவித்தார். இந்த பதில் அங்கிருப்பவர்களின் மனதை வென்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+