தமிழ்நாட்டை விட ஆந்திராவை அதிகம் தேடி வரும் முதலீடுகள்.. சந்திரபாபு நாயுடு பதில்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு-2026 கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இந்த மாநாட்டில் செய்தியாளர்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தமிழ்நாட்டை விட ஆந்திராவில் அதிக முதலீடு வருகிறதே என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் அளித்த பதிலை பார்ப்போம்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசு ஆகியவை இணைந்து 31-வது சி.ஐ.ஐ கூட்டாண்மை உச்சி மாநாட்டை ஆந்திராவின் மிகப்பெரிய நகரமான விசாகப்பட்டினம் நகரில் நடத்தின‌.‌

Chandrababu Naidu Andhra Pradesh

சுமார் 58-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் 3,800-க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல் மற்றும் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்கள்.

நவம்பர் 12, நவம்பர் 13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகியுள்ளன. இந்த மாநாட்டின் மூலம் ஆந்திராவுக்கு சுமார் ₹9.98 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகள் கிடைத்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக சொல்வது என்றால் கூகுள் - அதானி ஏ.ஐ மையம் விசாகப்பட்டினத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மைய வளாகம் அமைக்க 5 ஆண்டுகளில் சுமார் $15 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

அதே போல, சுமந்த் சின்ஹா தலைமையிலான ரென்யூ பவர் நிறுவனம் 4 முக்கியத் திட்டங்களுக்காக ₹60,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்திருக்கின்றன.

பஞ்ச்ஷில் ரியால்டி ₹37,000 கோடியிலும், ஏ.எம் ஏ.ஐ ஃபேக்டரி ₹31,387 கோடியிலும் , ஏ.ஐ தரவு மையங்களை ஆந்திராவில் அமைப்பதாக ஒப்பந்தம் செய்து உள்ளன.

வாரி எனர்ஜிஸ் நிறுவனம் பேட்டரி மூலப்பொருட்கள் ஆலை அமைக்க 10000 கோடி முதலீடு செய்கிறது. ரிலையன்ஸ் மற்றும் கிரீன்கோ ஆகிய நிறுவனங்களும் பெரும் முதலீடுகளை ஆந்திராவில் செய்வதாக அறிவித்துள்ளன.

இந்த சூழலில் தமிழ்நாட்டை விட ஆந்திராவில் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்யவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, " நமது நாட்டில் மொத்தம் 28 மாநிலங்கள் உள்ளன. அந்த 28 மாநிலங்களும் முதலீட்டை ஈர்ப்பதற்காக போட்டி போடுவார்கள். மாநாடுகள் நடத்துவார்கள். ஆனால் எந்த மாநிலத்தில் முதலீடு செய்யலாம் என்று முதலீட்டாளர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

இதுவரை இந்தியாவில் 31 தொழில் மாநாடுகள் நடந்துள்ளது. அதில் 8 மாநாடுகளை நான் நடத்தி உள்ளேன். 1998-ல் முதலீட்டாளர்களுடன் இணைந்து நான் செயல்பட்டப்போது பணக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவே என்னை பலர் விமர்சனம் செய்தார்கள். ஆனால் அதனை நான் கண்டுகொள்ளவில்லை.

நமது மாநிலத்தை நம்பி முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்களுக்கு நிறைய ஊக்கத் திட்டங்களைத் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்மை தேடி நம்பிக்கையுடன் வருவார்கள். முதலீட்டை பொறுத்தவரை இதற்கு ஸ்ரேட்டஜி மிகவும் முக்கியம். அதன்படி தான் நான் செயல்படுகிறேன்" இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+