கோவை ஓட்டலுக்கு வந்த அப்சரா.. அடுத்து என்னாச்சு தெரியுமா? தெலுங்கானா பூசாரிக்கு தேவையா? சபாஷ் கோர்ட்
ஹைதராபாத்: சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் அப்சராவின் தீராத ஆசை.. ஆனால், வாய்ப்புகள் உடனே கிடைக்காது என்பதால், டிவி சீரியலில் நடிக்க முடிவு செய்தார்.. இதற்காக நிறைய இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்தார்.. அப்போதுதான், பூசாரியின் பார்வை, அப்சரா மீது விழுந்தது.. இது தொடர்பாக நீதிமன்றம் தந்துள்ள அதிரடி தீர்ப்பானது, தெலுங்கானா மக்களின் கவனத்தை பெற்று வருகிறது. என்ன நடந்தது தெலுங்கானாவில்?
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் சரூர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் குருகந்தி அப்சரா.. 30 வயதான அப்சராவுக்கு சினிமாவில் நடிக்க மிகவும் ஆசை.. அதற்கான வாய்ப்பு எதுவும் உடனே கிடைக்காது என்பதால், டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.

கடவுளிடம் பிரார்த்தனை
அப்சராவுக்கு கடவுள் பக்தி அதிகம்.. அதனால், அந்த பகுதியிலுள்ள கோயிலுக்கு அடிக்கடி சென்று பிரார்த்திவிட்டு வருவார்.. அப்படி கோயிலுக்கு செல்லும்போதுதான் வெங்கட சாய் கிருஷ்ணா என்ற 36 வயது பூசாரி, அப்சராவுக்கு நட்பாகி உள்ளார்.
இந்த பூசாரிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆனாலும், அப்சராவின் அழகில் மயங்கிய சாய் கிருஷ்ணா, அப்சராவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை சொல்லி, நம்பிக்கையை விதைத்துள்ளார்.. ஒருகட்டத்தில் அப்சராவிடம் நெருங்கிபழகி, உல்லாசம் இருந்துள்ளார்.. ஆனால், திருமண பேச்சை எடுக்காமலேயே இருந்துள்ளார்.
உல்லாசத்தில் மூழ்கிய பூசாரி
பல நாட்கள் சென்றநிலையில், திருமணத்திற்கு அப்சரா வற்புறுத்த துவங்கியிருக்கிறார். ஆனால், அதற்கு சாய் கிருஷ்ணா தயாராக இல்லை.. திருமண பேச்சை அப்சரா எடுத்தபோதெல்லாம், பூசாரிக்கு எரிச்சலாக இருந்தது.. அதுவே பெரிய அழுத்தமாகவும் மாறியது.. இதனால் அப்சராவை கொலை செய்ய பூசாரி முடிவு செய்தார்..

அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் , அப்சரா தன்னுடைய நண்பர்களுடன் கோவை செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார்.. அப்போது அங்கு சென்ற பூசாரி, ஏர்போர்ட்டில் கொண்டுபோய் விடுவதாக சொல்லிவிட்டு, வீட்டிலிருந்து காரில் அழைத்து சென்றார்.
ஜூன் 3, 2023 அன்று அப்சராவை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு, ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு சுல்தான்பள்ளியில் உள்ள ஒரு இடத்தில் தங்கியுள்ளனர். பிறகு, மறுநாள் அதாவது ஜூன் 4ம் தேதி அதிகாலையில், அப்சராவை ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை கல்லால் அடித்தே கொலை செய்தார்
சடலத்துடன் காரில் சுற்றிய பூசாரி
ஆனால், அப்சராவின் சடலத்தை என்ன செய்வதென்றே தெரியாமல், காரிலேயே சடலத்தை 2 நாட்கள் வைத்திருந்தார்.. பிறகு, தன் வீட்டின் அருகே உள்ள ஒரு அரசு அலுவலகத்தின் செப்டிக் டேங்கில் சடலத்தை போட்டு மறைத்துவிட்டார்.. பெற்றோரிடமும் அப்சராவை கோவைக்கு அனுப்பிவிட்டேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்.. அதுமட்டுமல்ல,
தன்மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக,"அப்சராவுக்கு போன் போகவில்லை, அவரை தொடர்புகொள்ள முடியவில்லை" என்றும் சொல்லி உள்ளார். மேலும், அப்சராவை காணவில்லை என்று, அவரது அம்மாவையே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று பூசாரி புகார் தந்திருக்கிறார். இந்த புகாரின்பேரில் விசாரணையும் ஆரம்பமானது.
2 வருடங்களாக நடந்த வழக்கு
கடைசியாக அப்சராவுடன் சென்றது பூசாரிதான் என்பதால், அவர் மீதுதான் போலீசுக்கு சந்தேகம் அதிகமானது. பிறகு தங்கள் பாணி விசாரணையை போலீசார் அவரிடம் துவங்கினார்கள். அப்போதுதான் நடந்த கொலையை போலீசில் வாக்குமூலமாக சொன்னார்.. இதற்கு பிறகு சாமியார் கைதானார்.. இந்த வழக்கு கடந்த 2 வருடங்களாக ரங்காரெட்டி கோர்ட்டில் நடந்து வந்தது..
இதன் விசாரணைகள் அனைத்தும் முடிந்து தற்போதுதான் தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. அதன்படி, அப்சராவை கொலை செய்த பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கு ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு சுமார் ரூ.9.75 லட்சம் இழப்பீடும் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த 2 வருட காலமாகவே, தெலுங்கானாவை உலுக்கிய அப்சரா வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை தரப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications