ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளியே ஓடிய பாஜக "தலை".. பின்னாடியே சாவகாசமாக வந்த அமித் ஷா.. "அவமானம்".. கொதிக்கும் தெலுங்கர்கள்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானாவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஹைதராபாத் வைத்திருந்தார். அப்போது நடந்த சம்பவம் ஒன்று தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    ஜுனியர் என்டிஆரை சந்தித்த மத்திய அமைச்சர் அமித்ஷா

    தெலுங்கானாவில் உள்ள முனுகுடுவில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் அங்கு தீவிரமாக நடந்து வருகிறது.

    தற்போது வரை உள்ளூர் கருத்து கணிப்புகள் முனுகுடுவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிதான் வெற்றிபெறும் என்று கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. இங்கே எப்போதும் ஆளும் கட்சி வென்றது கிடையாது என்பதால் முதல் முறை ஆளும் கட்சியாக டிஆர்எஸ் வெற்றிபெறும் என்று நம்பப்படுகிறது.

    இந்த நிலையில்தான் அங்கு பிரச்சாரம் செய்ய அமித் ஷா நேரடியாக நேற்று வந்தார். தென்னிந்தியாவில் கால் பதிக்க தீவிரமாக முயன்று வரும் பாஜக இந்த இடைத்தேர்தலை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    பாஜகவில் இணைகிறாரா நடிகர் ஜூனியர் என்டிஆர்? திடீரென அமித் ஷாவுடன் சந்திப்பு ஏன்? பின்னணி பாஜகவில் இணைகிறாரா நடிகர் ஜூனியர் என்டிஆர்? திடீரென அமித் ஷாவுடன் சந்திப்பு ஏன்? பின்னணி

    கூட்டம்

    கூட்டம்

    நேற்று இங்கு நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அமித் ஷா உரையாற்றினார். ஆனால் அங்கே எதிர்பார்த்ததை விட கூட்டம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அமித் ஷா வெளியேறினார். அதன்பின் செகந்திராபாத் சென்ற அவர் அங்கு உள்ள கோவில் ஒன்றில் வழிபாடு செய்தார். அதன்பின் ஹைதராபாத் சென்றவர் அங்கு ஜூனியர் என்டிஆரை சந்தித்தார்.

    ஜூனியர் என்டிஆர்

    ஜூனியர் என்டிஆர்

    ஜூனியர் என்டிஆர்.. ஆந்திராவில் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்டி ராமா ராவின் பேரன் ஆவார். இந்த நிலையில்தான் அமித் ஷா.. ஜூனியர் என்டிஆர் இடையே நடந்த சந்திப்பு அதிக கவனம் பெற்றது. தென்னிந்தியாவில் கால் பதிக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் மூலம் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவை பெற பாஜக முயற்சி செய்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அமித் ஷாவின் இந்த மூவ் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    சிக்கல்

    சிக்கல்

    ஆனால் நேற்று நடந்த வேறு ஒரு சம்பவம் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெலுங்கர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று செகந்திராபாத்தில் உள்ள கோவில் ஒன்றில் அமித் ஷா வழிபாடு நடத்தினார். அதன்பின் வெளியே வந்த அமித் ஷா மெதுவாக நடந்து கொண்டு இருந்தார். அவர் வெளியே செருப்பை விட்டு இருந்த நிலையில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் எம்பி பந்தி சஞ்சய் வேகமாக ஓடிப்போய் அந்த செருப்பை கையால் எடுத்தார்.

    செருப்பு

    செருப்பு

    வேகமாக ஓடிப்போய் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு பந்தி சஞ்சய் அமித் ஷா காலுக்கு அருகே வைத்தார். இவரின் செயல் வீடியோவாக வெளியாகி தெலுங்கானா, ஆந்திரா பிரதேசம் முழுக்க பரவி வருகிறது. இதுதான் தற்போது தெலுங்கர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கர்கள் சுயமரியாதையை இருவரும் அவமதித்து விட்டனர் என்று தெலுங்கர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

    டிஆர்எஸ்

    டிஆர்எஸ்

    தெலுங்கானா முதல்வர் டிஆர்எஸ், அமைச்சர் கேடிஆர் ஆகியோர் அமித் ஷாவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். தெலுங்கர்கள் சுயமரியாதை மிக்கவர்கள். ஆனால் டெல்லியில் இருந்து வந்தவர்களிடம் பாஜகவில் உள்ள தெலுங்கர்கள் சுயமரியாதையை இழந்து நிற்கிறார்கள். நமக்கு இழைக்கப்பட்ட அவமானம் இது என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். கட்சி சாராத தெலுங்கர்கள் சிலரும் இந்த சம்பவத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    English summary
    Why do Telugu people are not happy with the thing that happened in Minister Amit Shah's visit? தெலுங்கானாவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஹைதராபாத் வைத்திருந்தார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X