"முத்தம்" தந்த ரோஜா.. சலசலக்கும் வீடியோ.. பின்னாடியே ஷேர் ஆகும் இன்னொரு கலகல வீடியோ.. பரபர நகரி
நடிகை ரோஜாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது
ஹைதராபாத்: அமைச்சர் ரோஜாவின் இன்னொரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
Recommended Video
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டபோது அதில் உறுப்பினராக சேர்ந்த ரோஜா, கடந்த 2014ல் நடந்த பொதுத்தேர்தலில் எம்எல்ஏவானார்.. மறுபடியும் 2019 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இப்போது அவர் ஏபிஐஐசி யின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.. இப்படி அரசியல் வட்டாரத்தில் புகழுடன் இருக்கும் ரோஜாவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடமும் நல்ல பெயர் இருக்கிறது...

காலில் விழுந்தார்
அதேபோல, ரோஜா மீதும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நிறைய மரியாதையும் உள்ளது.. தமிழ்நாட்டுக்கு வந்தால்கூட, ஜெகன்மோகன் ரெட்டியை பாராட்டி நாலு வார்த்தையாவது சொல்லிவிட்டு செல்வார்.. அந்த பாசத்தை சில நாட்களுக்கு முன்புகூட நேரடியாகவே முதல்வரிடம் வெளிப்படுத்தினார்.. ஜெகன்மோகன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ரோஜாவும் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய ரோஜா பிறகு, ஜெகன்மோகன் ரெட்டியின் காலில் விழுந்து தன் மரியாதையை தெரிவித்தார்...

முத்தம்
உடனே ஜெகன்மோகனும் ரோஜாவின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார்... அப்போது ரோஜா அவரின் கையைப் பிடித்து பாசத்தின் வெளிப்பாடாக முத்தம் கொடுத்தார்.. இந்த வீடியோ காட்சி சோஷியல் மீடியாவில் வைரலானது.. ஒரு சகோதரி, சகோதரனின் மேல் காட்டும் அன்பு தான் என்றாலும், ஆங்காங்கே சிறு சலசலப்பையும் ஏற்படுத்தியது.. இந்த நேரத்தில் இன்னொரு வீடியோவும் வைரலாகி கொண்டிருக்கிறது.

65 வயது பெரியவர்
ஆந்திராவில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைந்ததா என்று அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவுறுத்தலின்படி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து "வாசலுக்கு வாசல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்" என்ற நிகழ்ச்சியை நடத்தி மக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்.

கல்யாணம்
அந்த வகையில், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில் அமைச்சர் ரோஜாவும் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்தார்... அப்போது, ஒரு வீட்டில் இருந்த 65 வயது முதியவரிடம் பென்ஷன் சரியாக கிடைக்கிறதா என்று கேட்டார். அதற்கு அந்த பெரியவர், "பென்ஷன் எல்லாம் சரியாக கிடைக்கிறது... ஆனா 65 வயதாகிவிட்டது.. இன்னும் கல்யாணமே நடக்கவில்லை... தனியாதான் இருக்கேன்.. அதனால், எனக்கு கல்யாணம் செய்து வைக்க முடியுமா?" என்று கேட்டார்...

முத்தம் - சிரிப்பு
இப்படி கேட்டதுமே ரோஜா உட்பட அங்கிருந்தோர் அனைவருமே அதிர்ந்து சிரித்துவிட்டனர்... பிறகு ரோஜா அவரிடம், "எங்களால் பென்ஷன் மட்டும்தான் தர முடியும்... அதுக்காக கல்யாணமெல்லாம் செய்து வைக்க முடியாது" என்று சிரித்தபடி சொன்னார்.. இதை அங்கிருந்தோர் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிடவும், அது வைரலாகி கொண்டிருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications