தகாத உறவு.. அரை நிர்வாண கோலம்.. செருப்பு, துடைப்பத்தால் கணவனை வெளுத்த மனைவி.. வைரல் வீடியோ
கையும் களவுமாக பிடித்த கணவனை சரமாரி தாக்கினார் மனைவி
Recommended Video
ஹைதராபாத்: கள்ளக்காதலி வீட்டில் கணவனை அரை நிர்வாண கோலத்தில்.. கையும் களவுமாக பிடித்த மனைவி.. துடைப்பம், செருப்பை எடுத்து இருவரையும் விளாச ஆரம்பித்துவிட்டார்.
ஹைதராபாத் நகரத்தை அடுத்த செகந்திராபாத்தை சேர்ந்தவர் கோபால். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கும் ஈஸ்டர் ஏஞ்சல் என்பவருக்கும் 7 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆனது. 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் இதுதான் சாக்கு என்று, கோபால் வேறு பல பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தார். இந்த விஷயம் ஏஞ்சலுக்கு தெரிந்துவிட்டது. அதனால் தன் வீட்டில் சொல்லவும், குடும்பத்தார் பஞ்சாயத்தில் முறையிட்டனர். ஊர் பஞசாயத்தாரும் கோபாலை கூப்பிட்டு வார்னிங் தந்து அனுப்பியது.
ஆனால் திரும்பவும் கோபால் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார். அதனால் கள்ளக்காதலியுடன் கோபாலை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார் ஏஞ்சல்! இதைதொடர்ந்து செகந்திராபாத் ஹல்வால் சுபாஷ் நகரில் காதலியுடன் கோபால் குடியிருந்து வருவது தெரிந்தது.
பின்னர், அந்த வீட்டுக்கு தன்னுடைய உறவினர்களை அழைத்து உள்ளே நுழைந்தார். அங்கே கோபாலு அரை நிர்வாண கோலத்தில் இருந்தார். அவரை இழுத்து போட்டு தாக்க ஆரம்பித்தார் ஏஞ்சல். அதை தடுக்க வந்த கள்ளக்காதலிக்கும் சேர்ந்து விழுந்தது அடி.. எவ்வளவு அடித்தும் ஆத்திரம் அடங்காத எஞ்சல், கோபாலை தெருவுக்கு இழுத்து வந்து போட்டு, துடைப்பக்கட்டை, செருப்பால் அடித்தார்.
வலி தாங்க முடியாமல் கோபால் கதறினார். பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பெண்ணிடம், "ஆன்ட்டி.. ஆன்ட்டி.. அடிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்க ஆன்ட்டி" என்று கெஞ்சினார். தகவலறிந்து வந்த போலீசார் கோபாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications