நாம ஜெயிச்சுட்டோம் அம்மா.. நெகிழ வைத்த வீடியோவை பகிர்ந்து பாராட்டிய ஆந்திர முதல்வர் மகன்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 10-ஆம் வகுப்புத் தேர்வில் தாயும் மகனும் ஒரே நேரத்தில், அதுவும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது... அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொள்ளும் அந்தக் காட்சி, ஒரு அற்புதத்திற்குச் சற்றும் குறைவானதல்ல. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அம்மாநில அமைச்சருமான லோகேஷ் நாயுடு தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.

இன்று இணையதளத்தில் ஒரு அழகான வீடியோ பலரையும் நெகிழ வைத்துள்ளது. ஆந்திராவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அந்த தேர்வை எழுதிய ஒரு தாயின் வீடியோ தான் அது.

Woman Passes 10th Grade Exam Alongside Her Son Andhra Chief Minister s Son Applauds Her

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பி. லட்சுமி ஹரி, தனது 6-ஆம் வகுப்புடன் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். திருமணத்திற்குப் பிறகு, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சூழலில், அவரால் மீண்டும் பள்ளிக்குச் செல்லவோ அல்லது தனது கல்வியைத் தொடரவோ முடியவில்லை.

ஆனால், அவரது மகன் விஜய் பத்தாம் வகுப்புக்கு வந்தபோது, தனது தாயையும் தொலைதூரக் கல்வி வழியாகப் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதுமாறு வற்புறுத்தினார். அதன்படி, இந்த ஆண்டு தாயும் மகனும் இணைந்தே பொதுத்தேர்வை எழுதினார்கள். தற்போது வெளியான முடிவுகளில், தாய் லட்சுமி: 360/600 மதிப்பெண்களும், மகன் விஜய்: 562/600 மதிப்பெண்களும் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை இணையதளத்தில் பார்த்த லட்சுமி பூரித்துபோய் மகனுடன் கொண்டாடினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆறாம் வகுப்போடு நின்ற படிப்பை, மகன் ஊக்கப்படுத்தியதால் மீண்டும் தொடங்கி வெற்றி பெற்ற லட்சுமியை ஆந்திராவை தாண்டி பல்வேறு மாநில மக்கள் பாராட்டுகிறார்கள். இணையத்தில் ஹாட் டாபிக்காக லட்சுமி மாறி இருக்கிறார். படிப்பை கைவிட்ட பல பெண்களுக்கு லட்சுமி புது உத்வேகம் தந்துள்ளார்.

இந்நிலையில் இந்த வீடியாவை பகிர்ந்து ஆந்திர அமைச்சர் லோகேஷ் நர வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், " ஒரே நேரத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தாய் மற்றும் மகனின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது... ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்ளும் அந்த காட்சி ஒரு அதிசயத்திற்கு குறைவானது அல்ல. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மேற்கு கோதாவரி மாவட்டம் பாலக்கோலுவைச் சேர்ந்த லட்சுமி லஹரி, ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும், கல்வி கற்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் திறந்தநிலை பள்ளியில் சேர்ந்து தனது 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதினார். அதே நேரத்தில் அவருடைய மகன் விஜய்யும் தனது 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதினார்.

இருவரும் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த அந்தப் பதற்றமான தருணங்கள்... இறுதியில் தாய் 360 மதிப்பெண்களுடன் முதல் வகுப்பிலும், மகன் 562 மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றதை அறிந்த அந்த நிமிடம், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கொண்டாடியதைக் கண்டபோது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

வாழ்த்துகள் அம்மா... ஆசிகள் விஜய்! சிறிய காரணங்களுக்காகத் தனது படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள், லட்சுமி லஹரி காருவை ஒரு உத்வேகமாக எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+