வாரான்.. வாரான்.. வரான்லே.. தாமிரபரணி விஷாலாக தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண் இன்ஜினியர்.. பின்னணி
ஹைதராபாத்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தெலுங்கானா மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதுபற்றி அறிந்த ரயில்வே ஊழியர்கள், போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த பெண் காரை நிறுத்தாமல் தண்டவாளத்தில் ஓட்டி சென்றார். இறுதியில் அந்த பெண்ணை அந்த பகுதி மக்களின் உதவியுடன் போலீசார் பிடித்தனர்.
தமிழில் வெளியான ‛தாமிரபரணி' திரைப்படத்தில் நடிகர் விஷால் ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டி செல்வார். திரைப்படத்தில் விஷாலின் ‛இன்ட்ரோ' சீன் ஆக அது இடம்பெற்றிருக்கும்.

தற்போது நடிகர் விஷால் பாணியில் இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தில் கார் ஓட்டி சென்றுள்ளார். அந்த பெண் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொண்டக்கால் பகுதியில் ரயில் தண்டவாளம் செல்கிறது. இந்த தண்டவாளத்தில் ஏராளமான ரயில்கள் தினமும் சென்று வருகின்றன. பெங்களூர் உள்பட முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் இந்த தண்டவாளத்தில் பயணித்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று காலையில் கொண்டக்கால் ரயில்வே கிராசிங்கில் நின்ற கார் திடீரென்று தண்டவாளத்தை நோக்கி சென்றது.
அதன்பிறகு அந்த கார் தண்டவாளத்திலேயே பயணிக்க தொடங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி உடனடியாக ரயில் அதிகாரிகள், ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்டவாளத்தில் சென்ற கார் நாகுலபள்ளி அருகே சென்றது. அப்போது அங்கிருந்த மக்கள் காரை வழிமறிக்க முயன்றனர். ஆனால் காரை ஓட்டி சென்றவர் நிறுத்தவில்லை. தொடர்ந்து அவர் காரை ஓட்டி சென்றனர்.
இவர் கொண்டக்கால் பகுதியில் இருந்து நார்சிங்கி வரை 7 கிலோமீட்டர் தூரம் கார் சென்றது. நகுலபள்ளி மற்றும் சங்கரபள்ளி இடையே அந்த பகுதி மக்கள், ரயில்வே ஊழியர்கள், போலீசார் இணைந்து அந்த காரை நிறுத்தினர். அப்போது தான் காரை ஓட்டி சென்றது ஒரு பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் கைகளை சிலர் கட்டினர். பிறகு கார் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
பிடிபட்ட இளம்பெண்ணை ரயில்வே போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரவிகா சோனி என்பதும் அவர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியதும், சமீபத்தில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் தெரியவந்தது.
#woman drives car on railway track towards Hyderabad. The incident was reported near #shankarpally .
— DINESH SHARMA (@medineshsharma) June 26, 2025
Despite the railway staff attempted to stop her, she speeds off the car on the track.
As a precaution Railway officials halted #Bengaluru-#Hyderabad #trains . pic.twitter.com/bBbCywZlou
பணியை இழந்த ரவீகா சோனி மனஉளைச்சலுக்கு ஆளான நிலையில் அவர் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் வீடியோ பதிவிடுவதற்காக அவர் தண்டவாளத்தில் கார் ஓட்டி சென்றாரா? என்பது பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ரவீகா சோனுவின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications