"நாட்டு நாட்டு" பாடலுக்கு ஸ்டெப் போட்ட WWE நட்சத்திரங்கள்.. நெட்டிசன்களின் ரியாக்ஷன் இதுதான்!
ஐதராபாத்: ஐதராபாத்தில் நடைபெற்ற WWE போட்டியின் போது ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு வீரர்கள் டேன்ஸ் ஆடியது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரப்பபட்டு வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள காஜிபௌலி உள்விளையாட்டு அரங்கில் 'சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்' என்கிற பெயரில் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இந்த தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நடத்தியது. இந்தியாவில் நடைபெறும் முதல் டபிள்யூ டபிள்யூ ஈ(WWE) மல்யுத்தப் போட்டி இதுவேயாகும். இதில், மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான்சீனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வீரர்கள் ஒருவொருக்கொருவர் மல்லுக்ட்டியதும் இடையிடையே, டபிள்யூ டபிள்யூ ஈ போட்டிகளுக்கே உரித்தான காமெடியும் நடைபெற்றது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே, மல்யுத்த போட்டிக்கு இடையே, ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு வீரர்கள் நடனமாடியது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரபல WWE சூப்பர் ஸ்டார்களான ட்ரூ மெக்கிண்டயர், ஜிந்தர் மஹால், சாமி ஜெய்ன் ஆகிய வீரர்கள் ஒருவொருக்கொருவர் தோளில் கை போட்டுக் கொண்டு நாட்டு நாட்டு பாடலுக்கு ஸ்டெப் போட்டனர். இது தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்துக் கொண்டு இருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் ஆர்.ஆர். ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் சர்வதேச அளவில் அடைந்து இருக்கும் பிரபலம் மகிழ்ச்சியை கொடுப்பதாக கூறி வருகின்றனர்.
இன்னும் சில நெட்டிசன்களோ, WWE போட்டி என்பது ஆக்ரோஷமான சண்டைக்கு புகழ்பெற்றது, எனவே, WWE நிகழ்வுக்கு பாடல் மற்றும் நடனம் பொருத்தமாக இருக்காது என்று பதிவிட்டு வருகின்றனர். தெலுங்கின் முன்னணி நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோரை வைத்து இயக்குநர் ராஜமவுலி இயக்கிய திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பேன் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர். அகில இந்திய அளவிலும், பல உலக நாடுகளிலும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலம் ஆனது. இந்த பாடலுக்கு கடந்த மார்ச் மாதம் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது.
இந்த விருதை அப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார். நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெற்றதால் மேலும் பிரபலம் அடைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே நாட்டு நாட்டு பாடல் அவ்வப்போது ஒலிக்க விடப்பட்டு ரசிகர்களின் அப்ளாஸ்களை அள்ளும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை காண முடிந்தது. ஆனால், இந்த முறை WWE களத்தில் நாட்டு நாட்டு பாடல் ஓடியது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications