ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலை.. 30 இடங்களில் வெற்றி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Recommended Video
ஹைதராபாத்: 2 தேர்தலிலுமே ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒய்எஸ்ஆர்சி 115 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் வெளியாகி வருகிறது.
இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இரு தேர்தல்களிலுமே முன்னிலை பெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 25 இடங்களில் 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒய்எஸ்ஆர்சி முன்னிலை
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்தக்கட்சி இதுவரை ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
கருத்துக்கணிப்புகள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கு ஆதரவாகவே வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதேபோல் சட்டசபை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 30 இடங்களில் வெற்றி பெற்றதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4ல் வெற்றி
தெலுங்கு தேசம் கட்சி 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்தக்கட்சி இதுவரை 4 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

முதல்வராகிறார் ஜெகன்
ஜன சேனா கட்சி ஒரு சட்டசபை தொகுதியில் முன்னிலையில் உள்ளது. ஆந்திர சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளதால் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

30ல் பதவியேற்பு
வரும் 30ஆம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்கிறார். அதேநேரத்தில் படுதோல்வியை சந்தித்துள்ள சந்திரபாபு நாயுடு நாளை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications