போயஸ் கார்டனில் இருந்து விலகியே இருக்கிறேன்.. திவாகரன் திடீர் விளக்கம்!
போயஸ் கார்டனில் இருந்து விலகியே இருப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மன்னார்குடி போயஸ் கார்டனில் இருந்து விலகியே இருப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் நேற்று நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா குடும்பத்தினர் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் சசிகலா குடும்பத்தினர் போயஸ் கார்டனில் தங்கியிருந்ததே இந்த ரெய்டுக்கு காரணம் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். சசிகலா குடும்பத்தினர் தான் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

கருத்துச்சொல்ல ஒன்றுமில்லை
இந்நிலையில் சசிகலாவின் சகோதரரான திவாகரன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்கிறார்கள், சோதனை குறித்து கருத்துச்சொல்ல ஒன்றுமில்லை என்றார்.

நிறைய மாற்றங்கள் ஏற்படும்
மேலும் வருமான வரித்துறை சோதனையில் யாரும் தலையிட முடியாது என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றதை அடுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்றும் திவாகரன் தெரிவித்தார்.

கார்டனிலிருந்து விலகியே இருக்கிறேன்
ஜெயலலிதா வீட்டில் இருந்து லேப்டாப், பென்டிரைவ் கைப்பற்றப்பட்டது பற்றி தனக்கு தெரியாது என்றும் திவாகரன் கூறினார். தமது வீட்டில் இருந்து லேப்டாப், பென்டிரைவ் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார். போயஸ் கார்டனில் இருந்து தான் விலகியே இருப்பதாகவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.

பிரச்சனை வரும் என்பதற்காகவே
மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது சசிகலாவை வீடியோ எடுக்கசொன்னது ஜெயலலிதாதான் என்றும் அவர் கூறினார். பின்னாளில் ஏதாவது பிரச்சனை வரும் என்பதற்காகவே ஜெயலலிதா, சசிகலாவை வீடியோ எடுக்க கூறினார் என்றும் திவாகரன் தெரிவித்தார்.

விசாரணை வளையத்தில் தான்
பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லும் போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என்றும் அவர் கூறினார். 1996 இல் இருந்தே சசிகலா விசாரணை வளையத்தில் தான் இருக்கிறார் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications