மாப்பிள்ளை சார் தாடி வச்சீங்க.. உங்க கல்யாணத்துக்கு ஒரு ஈ, காக்கா கூட வராது.. வினோத கிராமம்!
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் பாரம்பரிய பழக்கத்தை கடைப்பிடிக்க மீனவ பஞ்சாயத்தார் கூட்டம்போட்டு வினோதமான முடிவு எடுத்துள்ளனர்.
மரங்களில் கூடு கட்டி வாழும் பறவைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பல ஊர்களில் தீபாவளியன்று கூட பட்டாசுகளை வெடிப்பதில்லை என்ற கட்டுப்பாடுகள் உள்ளன.
இது போல் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைக்காக கிராமத்தில் கூட்டம் போட்டு ஊர் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

வினோதம்
அந்த வகையில் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கத்தை கடைப்பிடிக்க மீனவ பஞ்சாயத்தார் கூட்டம் போட்டு வினோதமான முடிவு எடுத்துள்ளனர். அது என்னவென்பதை பார்ப்போம். மிகவும் வினோதமாக உள்ளது.

மணமகன்
காரைக்காலில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான திருமண விழாக்களில் மணமகன்கள் முடிவெட்டாமல் தாடியை முழுமையாக சவரம் செய்யாமல் கலந்து கொள்கிறார்கள். இது நமது பண்பாடாக தெரியவில்லை. இது குறித்து பெண் வீட்டாரோ, மணமகன் வீட்டாரோ கண்டுகொள்வதில்லை.

புறக்கணிப்பது
நமது பாரம்பரிய பண்பாட்டின்படி திருமணத்தின்போது, தாடி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. எனவே பழைய பண்பாட்டு, பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் வகையில் இனி வரும் காலங்களில் திருமணத்தின்போது மணமகன் தாடி வைத்திருந்ததால், அந்த திருமண விழாவை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.

பஞ்சாயத்து
தாடி வைப்பது, பிரெஞ்ச் தாடி வைப்பது என இளைஞர்கள் விதவிதமாக வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் மணமகனுக்கு சோதனையாக தாடி வைத்திருந்தால் அந்த திருமண விழாவிற்கே செல்வதில்லை என பஞ்சாயத்தார் முடிவு சற்று வினோதமாகவே உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications