மனைவிக்கான கிப்ட் காருக்கான பேன்சி நம்பருக்காக ரூ.8.75 லட்சம் செலவு செய்த கோடீஸ்வரர்!
சண்டிகர் : நம் ஊரில் ஒரு 9 லட்சம் ரூபாய் செலவு செய்து கார் வாங்குவார்கள். ஆனால் சண்டிகரில் ஃபேன்சி நம்பருக்காக ரூ.8.75 லட்சம் செய்துள்ளார் கோடீஸ்வரர். மனைவிக்கு காதல் தின பரிசாக கொடுக்க உள்ள ஆடம்பர காருக்குத்தான் இவ்வளவு செய்துள்ளார்.
சண்டிகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹரிஷ் கோயல் வயது 50. இவர் தனது மனைவிக்காக 1.50 கோடி செலவில் ஆடம்பர கார் ஒன்றினை கடந்த ஜனவரி 18ஆம் தேதி வாங்கினார். வாகனப் பதிவுக்கான ஏலத்தில் பங்கேற்ற அவர் ‘CH 01 BB 0001' என்ற ஃபேன்சி எண்ணை வாங்கினார். இதற்காக இவர் செலவு செய்த தொகை ரூ.8.75 லட்சம்.

ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹரிஷ் கோயலிடம் 7 கார்கள் உள்ளன. அத்தனை கார்களுக்கும் ஃபேன்சி எண் பெற்றுள்ளார்.
0001 என்ற இந்த எண்-ஐ பெறுவதற்கு 8 பேர் போட்டியில் இருந்ததாகவும் தான் ஒரே ஒரு முறை தன் தொகையை கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். 0002 என்ற எண்ணை அவதார் சிங் என்ற கோடீஸ்வரர் ரூ. 3,05000 செலவு செய்துள்ளார்.
0001 முதல் 0025 வரை பேன்சி எண்களை ஏலத்தில் விற்பனை செய்ததன் மூலம் மட்டும் 56.7 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளது வாகனப் பதிவு அலுவலகம்.












Click it and Unblock the Notifications