தூக்கு,விஷம்,தீக்குளிப்பு… 2013ல் 1.34 லட்சம் இந்தியர்கள் தற்கொலை
டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 2013ஆம் ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் தற்கொலை செய்து இறந்து போனதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி இதனை தெரிவித்தார்.இதில் முதலிடத்தில் மராட்டிய மாநிலமும், அதற்கடுத்த இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளன.

மகாராஷ்டிரா-தமிழ்நாடு
நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 16 ஆயிரத்து 662 பேரும், அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 601 பேரும் தற்கொலை முடிவை தேடிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திரா – மேற்கு வங்காளம்
ஆந்திர மாநிலத்தில் 14 ஆயிரத்து 607 பேரும், மேற்கு வங்காளத்தில் 13 ஆயிரத்து 55 பேரும், கர்நாடகத்தில் 11 ஆயிரத்து 266 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கேரளாவில் 8,646 பேர்
மத்தியப்பிரதேசத்தில் 9 ஆயிரத்து 446 பேரும், கேரளாவில் 8 ஆயிரத்து 646 பேரும் பலியாகியுள்ளதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை எண்ணிக்கை
கடந்த 2011ஆம் ஆண்டில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 585 பேரும், 2012ல் 1 லட்சத்து 35 ஆயிரத்து 445 பேரும், 2013-ல் 1 லட்சத்து 34 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications