"கொடுமையான 370".. காஷ்மீரில் ஒரு ஜாதிக்கே பறிக்கப்பட்ட ஓட்டுரிமை.. 67 ஆண்டு தடை சிதைந்தது எப்படி?
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் 67 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு ஜாதியினரே சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். அந்த ஜாதியினர் யார்? அவர்களுக்கு ஏன் காஷ்மீரில் ஓட்டுப்போட தடை விதிக்கப்பட்டது? இப்போது எப்படி மத்திய பாஜக அரசு அந்த தடையை உடைத்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீர்.. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மலை பிரதேசமாகும். இயற்கை எழில் சூழ்ந்த மாநிலம் என்பது எப்போதும் சர்ச்சைக்கும், கலவரத்துக்கும் பெயர் பெற்றது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் தான். இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

மேலும் நம்மிடம் உள்ள ஜம்மு காஷ்மீருக்கும் பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருகிறது. இதற்காக சதித்திட்டங்களை தீட்டி பயங்கரவாதிகளை அனுப்பி ஜம்மு காஷ்மீரின் அமைதியை பாகிஸ்தான் சீர்க்குலைத்து வருகிறது. தற்போது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் நம் நாட்டின் ராணுவ வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதனால் சமீப காலமாக ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் அமைதி திரும்பி வருகிறது. கடந்த 2019ல் மத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கம் செய்தது. அதன்பிறகு சட்டசபை தேர்தல் என்பது நடத்தப்படவில்லை. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசமாக மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக பல தேர்தல்களை சந்தித்துள்ள நிலையில் யூனியன் பிரதேசமாக முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்கிறது. 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 8 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும். முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின்(பரூக் அப்துல்லா மகன்) தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், பாஜக என நான்கு கட்சிகள் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இதில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் தனித்து போட்டியிடுகின்றன.
அதேவேளையில் உமர் அப்துல்லாவின்(பரூக் அப்துல்லா மகன்) தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் சிபிஎம் மற்றும் பாந்தர்ஸ் கட்சிகளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிட உள்ளது. சிபிஎம் மற்றும் பாந்தர்ஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடத்தில் களமிறங்க உள்ளன. இதுதவிர மீதமுள்ள 5 தொகுதிகளில் கூட்டணி தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் 5 தொகுதிகளில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் களமிறங்க உள்ளன.
இந்நிலையில் தான் வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜம்மு காஷ்மீரில் 67 ஆண்டுகளாக வசித்து வந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட ஜாதி மொத்தமாக ஓட்டளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. இது உண்மை தான் யார் அவர்கள்? இப்போது அவர்களுக்கு எப்படி ஓட்டுரிமை கிடைத்தது என்பது பற்றிய விபரம் வருமாறு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் சட்டப்பிரிவு 370 இருந்தது. அதேபோல் 35ஏ என்ற பிரிவும் அமலில் இருந்தது. இந்த சட்டப்பிரிவுகள் என்பது வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்து வாங்குவது, குடியேறுவதை தடுத்தது. இத்தகைய சூழலில் தான் பஞ்சாப்பில் இருந்து வால்மிகி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் காஷ்மீருக்கு சென்றனர். 1957 ம் ஆண்டில் காஷ்மீரில் தொற்று நோய் பரவிய நிலையில் தூய்மை பணிக்காக இந்த சமுதாயத்தினர் காஷ்மீருக்கு பஞ்சாப்பில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.
அன்று முதல் அவர்கள் காஷ்மீரில் வசித்து வந்தாலும் கூட நிரந்தர விலாசம், ஓட்டுரிமை என்பது இல்லாமல் இருந்தனர். கிட்டத்தட்ட அவர்கள் காஷ்மீரில் இரண்டாம் தர குடிமக்களாக தான் வாழ்ந்து வந்தனர். இதற்கு காரணம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவு தான். தற்போது அந்த சட்டப்பிரிவு நீக்கி உள்ளதால் முதல் முறையாக காஷ்மீரில் வசிக்கும் வால்மிகி சமுதாயத்தினர் ஓட்டளிக்க உள்ளனர்.
370 வது சட்டப்பிரிவு நீக்கத்தை தொடர்ந்து இந்த வால்மிகி சமுதாயத்தினருக்கு கடந்த 2020ம் ஆண்டில் காஷ்மீரில் தங்குமிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன்மூலம் அவர்கள் காஷ்மீர் குடிமக்களாக மாற்றப்பட்டனர். அதன்பிறகு அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது முதல் முறையாக சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இதனால் வால்மிகி சமுதாயத்தினர் ஹேப்பியாகி உள்ளனர். இதற்கு காரணம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications