150 மீ பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பயணிகளின் வேன்! 12 பேர் சடலமாக மீட்பு! உத்தரகாண்டில் சோகம்
டேராடூன்: உத்தரகாண்ட மாநிலத்தில் சுற்றுலாவுக்கு வந்திருந்த பயணிகள் வேன் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவிலிருந்து பயணிகளுடன் டெம்போ டிராவ்லர் வேன் ஒன்று கேதர்நாத்துக்கு சென்றிருக்கிறது. இந்த வேன் ருத்ரபிரயாக் மாவட்டம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 150 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது. விபத்து குறித்து சக வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.

வேன் கவிழ்ந்த பள்ளத்திலிருந்து தற்போது வரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து குறித்து மாநில பேரிடர் மீட்பு படையினர் கூறுகையில்,
"விபத்தில் சிக்கிய வாகனம் நொய்டாவிலிருந்து வந்திருக்கிறது. நொய்டாவிலிருந்து ருத்ரபிரயாக் நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது குறித்து தெரியவில்லை. 150 மீ பள்ளத்திலிருந்து 12 பேரின் உடல்களை மீட்டிருக்கிறோம். டிரைவர் பலத்த காயமடைந்திருக்கிறார். மீட்பு பணி முழுமையாக முடிந்த பின்னரே மேலதிக விவகாரங்களை தெரிவிக்க முடியும்" என்று கூறியுள்ளார்.
இந்த விபத்து குறித்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் இரங்கல் தெரிவித்திருக்கிறார். "காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அவர்கள் விமானம் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விசாரணையில் விபத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications