யூரி தாக்குதல் எதிரொலி: ராணுவ அதிரடித் தாக்குதலில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் உள்ள லச்சிபுராவில் 10 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தார் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினர் அந்த 4 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

இருப்பினும் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து யூரி செக்டாரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்த சூழலில் இன்று பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 15 தீவிரவாதிகளில் 10 பேரை யூரி செக்டாரில் உள்ள லச்சிபுராவில் வைத்து ராணுவத்தார் சுட்டுக் கொன்றுள்ளனர். மீதமுள்ள 5 பேரை ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
இது யூரி தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. யூரி தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அதற்கு பின்னணியில் இருப்பவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications