பட்ட பகலில்.. பையனுக்கு 10 வயசுதான் இருக்கும்.. 30 செகன்ட்டில்.. வாயடைத்து போன போலீஸ்!
வங்கியில் 10 லட்சத்தை 10 வயது சிறுவன் திருடியுள்ளான்
போபால்: 10 வயசு பையன்.. 10 லட்சம் ரூபாயை.. 30 செகண்ட்டில் எடுத்து கொண்டு அவன் பாட்டுக்கு போய் கொண்டே இருக்கிறான்.. பட்ட பகலில் பேங்கில் இப்படி ஒரு கொள்ளையை நடத்தியுள்ளான் சிறுவன்.. இந்த சிசிடிவியை பார்த்து போலீசார் வாயடைத்து போயுள்ளனர்.
மத்திய பிரதேசம், நிமூச் பகுதியில் உள்ள கோ- ஆப்பரேட் வங்கியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த வீடியோவில், காலை 11 மணி ஆகிறது.. கோ-ஆப்பரேட்டிவ் பேங்க் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.

10 வயது சிறுவன் உள்ளே நுழைகிறான்.. அவன் டிரஸ் கிழிந்து காணப்படுகிறது.. பேங்க் கஸ்டமர்களில் கியூவில் நின்று கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த பையன் நேராக கேஷியர் ரூம் போகிறான்.. அங்கிருந்த 10 லட்சம் ரூபாயை அசால்ட்டாக லவட்டி கொண்டு போகிறான்.. இத்தனை பேர் இருக்கிறார்களே, பட்டப்பகல், கேமிரா இருக்கிறதே என்ற கவலை கொஞ்சமும் இல்லாமல், அவன் பாட்டுக்கு பணத்தை எடுத்து கொண்டு வேகமாக வெளியேறுகிறான்.
கூட்டம் நிரம்பி கிடந்த அந்த பேங்கில்,கொள்ளை போனது உடனடியாக தெரியவில்லை... அதுவும் இல்லாமல் சிறுவன் மீது யாருக்கும் எந்தவித சந்தேகமும் எழவில்லை.. ஆனால் சிறுவன் வேகமாக வெளியே செல்லும் போது, திடீரென அலாரம் அடித்துவிட்டது.. எக்ஸிட் மிஷினில் அப்படி ஒரு சத்தம் வரவும் செக்யூரிட்டிகள் அலர்ட் ஆனார்கள்.. வேக வேகமாக சென்ற சிறுவனை மடக்கி பிடிக்க முயன்றனர்.. ஆனால் அவன் அதற்குள் ஓடிவிட்டான்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டது.. அவர்கள் விரைந்து வந்து சிசிடிவி கேமிரா காட்சியை ஆராயந்தபோதுதான், அவன் உள்ளே நுழைந்து வெளியே செல்வது வரை பதிவாகி உள்ளது... இந்த சிறுவன் குறித்து நிமுச் மாவட்ட எஸ்பி சொல்லும்போது, "அந்த 10 வயது பையன் ரொம்ப குள்ளமா இருந்தான்.. அவன் குட்டியாக இருக்கவும் யாருக்குமே தெரியவுமில்லை, அவனை கவனிக்கவுமில்லை, விரைவில் தேடி வருகிறோம்" என்றார்.
ஆனால் 10 வயது சிறுவன் எப்படி ஒரு பேங்கில் உள்ளே தைரியமாக நுழைய முடியும்? கேஷியர் ரூமில் இந்த இடத்தில்தான் பணம் உள்ளது என்று அவனுக்கு எப்படி தெரியும்? என்ற சந்தேகம் எழுகிறது.. அதனால் எப்படியும் பெரிய கொள்ளை கும்பல் இதில் சம்பந்தப்பட்டிருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் இப்படித்தான் சிறுவர்களுக்கு ஸ்பெஷல் டிரெயினிங் தந்து பல கிரிமினல் வேலைகளில் ஈடுபடுத்துகிறார்களாம் சிலர்.. அவர்களையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.. 10 வயசு பையன் 10 லட்சத்தை முப்பதே செகண்டில் கொள்ளையடித்த இந்த சிசிடிவி காட்சி பலரும் பரபரபப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications