100% மெஜாரிட்டி எனக்குதான் கிடைக்கும்... அடித்து சொல்லும் எடியூரப்பா!
100 சதவீத மெஜாரிட்டி எனக்குதான் கிடைக்கும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: 100 சதவீத மெஜாரிட்டி எனக்குதான் கிடைக்கும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 117 எம்எல்ஏக்கள் ஆதரவை கொண்டுள்ள மஜத - காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் வஜூபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை அழைத்தார்.
வெறும் 104 எம்எல்ஏக்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டு எடியூரப்பா கர்நாடக முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றார். தனிபெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜக ஆட்சியமைத்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதனை எதிர்த்து மஜத- காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பாஜக அவகாசம் கேட்டும் அதனை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

விதான் சவுதா 144 தடை ஆணை
இதனை முன்னிட்டு கர்நாடக சட்டசபை அமைந்துள்ள விதான் சவுதா பகுதியில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

எடியூரப்பா நம்பிக்கை
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, 100 சதவீதம் எனக்குதான் மெஜாரிட்டி கிடைக்கும் என எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளுக்கான அனைத்து முடிவுகளையும் நாளை எடுப்பேன் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

எடியூரப்பாதான் முதல்வர்
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் அமைச்சருமான சதானந்தா கவுடா மாலை 4.30 மணி வரை காத்திருங்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு எடியூரப்பா தான் கர்நாடக முதல்வர் என தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications