டெல்லியில் பெண்களுக்கு “இலவச பெப்பர் ஸ்ப்ரே”– முதலில் 1000 பேருக்கு வழங்கி போலீஸ் அதிரடி
டெல்லி: டெல்லியில் அதிகரித்தும் வரும் பாலியல் குற்றங்களிலிருந்து பெண்களைக் காப்பாற்ற பெண்களுக்கு இலவச மிளகு ஸ்ப்ரே வழங்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
வடக்கு டெல்லியில் கடந்த 5 ஆம் தேதியன்று உபேர் கால் டாக்சி டிரைவரால் 27 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பெண்களுக்கு டெல்லியில் பாதுகாப்பில்லை என்ற கருத்தும் எழுந்தது.

4 மணி நேரத்திற்கு ஒருவர்:
இந்த நிலையில் டெல்லியில் 4 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:
இது தவிர கடத்தல்காரர்களால் இளம்பெண்கள் கடத்தப்படுவதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக நாளொன்றுக்கு சுமார் 40 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் அதில் 4 வழக்குகள் பலாத்கார வழக்குகள் என்று அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் கடத்தல்:
அதுவும் டெல்லி புறநகர், வடகிழக்கு மற்றும் கிழக்கு டெல்லி ஆகிய பகுதிகளில் அதிக கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

1686 பெண்கள் பலாத்காரம்:
இந்த வருடத்தில் கடந்த நவம்பர் 15 வரை 1,686 பேர் பாலியல் பலாத்காரத்திற்கும், 3,589 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை குற்ற விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவியும் வழக்குகள்:
கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 11,479 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக 13,230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிளகு ஸ்ப்ரே வழங்க முடிவு:
டெல்லியில் கடந்த 2 வருடங்களாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. இதை தொடர்ந்து டெல்லி போலீசார் பெண்கள் பாதுகாப்புக்காக மிளகு ஸ்ப்ரே கேன் வழங்க நடவடிக்கை எடுத்து வருன்றனர்.

முதலில் 1000:
முதலில் 1000 மிளகு ஸ்பிரே கேன்கள் பெண் பத்திரிகையாளர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இளம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

இலவச விநியோகம்:
பெண்கள் தங்களுக்கு மிளகு ஸ்பிரே கேன்கள் வேண்டும் என்றால் 2 பாஸ்போர்ட் போட்டோவுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் அதிக பட்ட மிளகு ஸ்பிரே கேன்களை வாங்கி விநியோகிக்கவும் முடிவு செய்து உள்ளது.












Click it and Unblock the Notifications