கைதாங்கலாக அழைத்து வரப்பட்ட ஷியாம் சரண் நேகி.. ஹிமாச்சலில் வாக்களித்த 102 வயது முதியவர்!

Subscribe to Oneindia Tamil

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் கைதாங்கலாக அழைத்து வரப்பட்ட ஷியாம் சரண் நேகி என்ற முதியவர் வாக்களித்தார்.

நாடாளுமன்றத்துக்கு மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

102 years old Shyam Saran Negi casts his vote

இதைத் தொடர்ந்து இன்று 7-ஆவது கட்ட இறுதி கட்ட தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள கல்பா தொகுதிக்கு கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டார் ஷியாம் சரண் நேகி.

இவருக்கு வயது 102 ஆகும். தலைப்பாகையுடன் வந்த அவர் கைத்தாங்கலாக பிடித்து வராவிட்டால் அவருக்கு 102 வயது இருக்கும் என்ற சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு திடகாத்திரமாக இருந்தார்.

இவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு கை விரலை புகைப்படக்காரர்களுக்கு காட்டினார். 1951-ஆம் ஆண்டு முதல் முறையாக பொதுத் தேர்தல் அறிமுகம் செய்த போது நேகியும் முதல் முறையாக வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+