மும்பையில் கடத்தப்பட்ட 12 வயது சிறுவன் கொலை - துண்டு துண்டாக உடல் பாகங்கள் மீட்பு
மும்பை: மும்பையில் சமீபத்தில் கடத்தப்பட்ட 12 வயது சிறுவனின் உடல் சிறுசிறு துண்டுகளாக தானேயின் அருகில் கல்யாண் என்ற இடத்தில் திங்களன்று கண்டறியப்பட்டுள்ளது.
ரோஹன் குச்சிட் என்ற அந்த சிறுவன் ஒரு 7 ஆம் வகுப்பு மாணவன். ஆல் செயிண்ட்ஸ் பள்ளியில் படித்து வந்த அந்தச் சிறுவன் ஒரு எலெக்ட்ரீசியன் மூலம் கடத்தப்பட்டான்.அவன்தான் தற்போது, சிறுவனை மின்சார ரம்பம் மூலம் துண்டுதுண்டாக வெட்டிப் போட்டிருக்கின்றான்.
ரோஹனின் பெற்றோர் சிறுவன் கடத்தலைப் பற்றி கடந்த ஏப்ரல் 17 அன்று பாஸர்பாத் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.
அதன்பின்னர், சிறுவனின் தந்தையான நகைக்கடை வைத்திருக்கும் உத்தம்பாய் குச்சாலிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.அதில் 50 லட்சம் கொடுத்தால்தான் சிறுவனை விடுதலை செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி அழைப்பைப் பற்றி சிறுவனின் பெற்றோர் காவல்துறையிடம் தெரிவித்துவிட்டனர்.அது தெரிய வந்ததும்தான் கடத்தல் செய்தவன் சிறுவனை கோவத்தில் துண்டுதுண்டாக வெட்டிப் போட்டுள்ளான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, துண்டாக வெட்டப்பட்ட கால்களை கிவிந்த்வாடி பூ சந்தையில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.அடையாளத்திற்கான சோதனைகளின் போது அது ஒரு 12 வயது மதிக்கத்தக்க சிறுவனுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சிறுவனின் தந்தையும் அது தன் மகனுடையதுதான் என்பதை உறுதி செய்தார்.இன்று காலையில் மீதிப்பாகங்களும் ஒரு சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாஸர்பாத் போலீசார் இதனைப் பற்றி, "நான்கு பேர் இந்தக் கொலையின் பிண்ணனியில் இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், அவர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications