12 வயது மாணவியை பலமுறை பலாத்காரம் செய்து கருத்தடை மாத்திரை கொடுத்த பள்ளி முதல்வர்
போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி முதல்வர் ஒருவர் 12 வயது மாணவியை பலமுறை பலாத்காரம் செய்ததுடன் அவருக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை மாத்திரைகள் அளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் உள்ள பள்ளி ஒன்றின் முதல்வராக உள்ளவர் சபன் மிஷ்ரா. அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி அவரிடம் டியூஷன் படித்துள்ளார். இதற்காக மாணவி மிஷ்ராவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அவர் எப்பொழுது எல்லாம் மிஷ்ராவின் வீட்டுக்கு சென்றாரோ அப்போது எல்லாம் அவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாணவி தனக்கு வயிறு வலிப்பதாக மிஷ்ராவிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் இரண்டு கருத்தடை மாத்திரைகளை மாணவியிடம் அளித்து அவரை வலுக்கட்டாயமாக உட்கொள்ள வைத்துள்ளார்.
வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு வயிறு வலிப்பதாகவும் பள்ளி முதல்வர் மாத்திரை அளித்தும் சரியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் தனது பெற்றோரிடம் மிஷ்ரா தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மிஷ்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications