மகாராஷ்டிராவில் கடலில் குளித்த 13 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிராவின் முரூத் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற புனே கல்லூரியைச் சேர்ந்த 13 மாணவர்க்ள் கடலில் குளித்த போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவின் ரெய்கார் அருகே முருத் கடற்கரைக்கு புனே இனாம்தார் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர் 155 பேர் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களில் சிலர் கடலில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக அவர்களில் 13 பேர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரழந்தவர்களில் 3 பெண்கள் அடங்குவர். இவர்கள் அனைவரும் 18 முதல் 23 வயதுடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. உயிரழந்தவர்களின் முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மீட்பு பணியில் உள்ளூர் மீனவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications