Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெட்ட கெட்ட பழக்கத்தில் மணிப்பூர் பாஜக தலைவரின் மகன்? 130 ஆபாச வீடியோக்கள்.. போலீசுக்கு ஓடிய மனைவி

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: மணிப்பூர் அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டிருக்கிறது.. சுபம் குப்தா மீது அவரது மனைவி முன் வைத்திருக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகள், உள்ளூர் பாஜகவில் அதிர்ச்சியை தந்துள்ளது.. அதற்கு ஆதாரமாக இணையத்தில் வெளியாகிவரும் ஆபாச வீடியோக்களும் மிகப்பெரிய அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.. எனினும், அந்த வீடியோக்களின் உண்மைத்தன்மையையும் அம்மாநில போலீசார் ஆராய வேண்டியிருக்கிறது.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் தற்பொழுது அதிபர் ஆட்சியின்கீழ் உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருவதாக தெரிகிறது..

Manipur BJP 130 Obscene Videos 130

இப்போதைக்கு அங்கு புதிய அரசாங்கத்தை அமைக்க தனக்கு 44 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷாம் சிங் கூறியிருக்கிறார்..

மணிப்பூர் பாஜக பரபரப்பு

ஆட்சி அமைப்பது தொடா்பாக மணிப்பூா் பேரவைத் தலைவா் சத்யவா்தா, 44 எம்எல்ஏக்களை தனித்தனியாகவும் சந்தித்திருக்கிறார்.. புதிய அரசு அமைவதில் அவா்களில் யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால், இதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவு எடுக்கும் என்றும் சத்யவாதா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.. இப்படிப்பட்ட சூழலில், மணிப்பூர் பாஜகவில் புயல் வீச துவங்கியிருக்கிறது.

மகிளா மோர்ச்சா நகர தலைவராக உள்ளவர் சீமா குப்தா. இவரது மகன் சுபம் குப்தா மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. சுபம் குப்தா ஏராளமான பெண்களுடன் நெருக்கமாக உள்ள ஆபாச வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

சுபம் குப்தாவுக்கு கடந்த 2021- ல் ஷீத்தல் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.. ஷீத்தல் தந்த புகாரின் பேரில்தான் இப்படியொரு சம்பவமே வெளிச்சத்துக்கு வந்தது என்கிறார்கள்..

பல பெண்களுடன் உறவு

அந்த புகாரில், "என்னுடைய கணவர் சுபம் குப்தா, பல பெண்களுடன் முறைகேடான உறவை வைத்திருக்கிறார்.. உடலுறவு கொள்ளும்போது அதனை வீடியோவாக பதிவிட்டுக்கொள்ளும் பழக்கமும் அவருக்கு உள்ளது..

என்னை மனம் மற்றும் உடல் ரீதியாக என்னுடைய கணவர் துன்புறுத்தியிருக்கிறார்.. என்னை வலுக்கட்டாயப்படுத்தி ஆபாச படங்களை பார்க்க வைத்தார்.. 130க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சுபம் குப்தாவிடம் உள்ளது
தன்னுடைய அம்மா, ஒரு பாஜக தலைவர் என்றும், தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் சுபம் குப்தா என்னை மிரட்டுகிறார்.

தனக்கு பெரிய தலைவர்களுடன் தொடர்பு இருப்பதால், என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் சொல்கிறார்.. என்னை அவருடைய வீட்டில் அடைத்து வைத்து சாப்பாடு போடாமல் பட்டினி போட்டார்" என்றெல்லாம் ஷீத்தல் தன்னுடைய புகாரில் தெரிவித்திருக்கிறார்..

ஷீத்தல் தந்துள்ள இந்த புகாரின் பேரில் சுபம் குப்தா, சீமா உள்பட போலீஸார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.. எனினும் இந்த அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை.

பாஜக தலைவருக்கு நெருக்கடி

எனினும், ஷீத்தல் தெரிவித்திருக்கும் இந்த குற்றச்சாட்டுகள், தார்மீக முறைக்கேட்டை மட்டுமல்லாமல் துன்புறுத்தல், குற்றவியல் நடத்தையாகவும் கருதப்படுகிறது... ஷீத்தல் தெரிவித்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கு, சுபம் குப்தா, சீமா இருவருமே பதில் சொல்ல வேண்டும் என பாஜக மகளிர் அணியை சேர்ந்தவர்களுக்கு கடுமையான அழுத்தம் தரப்பட்டுள்ளது..

அப்படியானால், சுபம் குப்தாவின் அம்மா சீமா குப்தா, இத்தனை நாளும் பெண்ணுரிமை குறித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் பேசியதெல்லாம் என்னவாயிற்று? என்றும் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

பெருகும் சலசலப்புகள்

இனியும் பாஜக தலைவரின் மகன் என்ற போர்வையில், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் சுபம் தப்பித்து விட முடியாது என்றும் கொந்தளிப்புகள் பெருகி வருகின்றன..

ஏற்கனவே மணிப்பூர் அரசியலில் சலசலப்பு நிலவி கொண்டிருக்கிறது.. இந்நிலையில், சுபம் குப்தா மீது அவரது மனைவியே, முன் வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டுகளும், அதற்கு ஆதாரமாக இணையத்தில் வெளியாகிவரும் ஆபாச வீடியோக்களும் பாஜகவுக்குள் அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.. அதேசமயம், அந்த வீடியோக்களின் உண்மைத்தன்மையும் போலீசார் ஆராய வேண்டியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+