இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்.. 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்! காங். தலை தப்புமா?
சிம்லா: இமாச்சலில் நேற்று நடந்த மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பாஜகவின் 15 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் கட்சியாக மாறியது. அதேபோல, 3 சுயேட்சை வேட்பாளர்கள் காங்கிரசுக்கு ஆதரவளித்தனர். பாஜக 25 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சியாக இருக்கிறது. இந்நிலையில், இன்று அம்மாநிலத்தில் ராஜ்ய சபா உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 சுயேட்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு வாக்களித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

ஏற்கெனவே பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்கள் பலம் இருக்கும் நிலையில், தற்போது இது 6+3+25 என 34ஆக உயர்ந்திருக்கிறது. இம்மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 தொகுதிகளை கைப்பற்றியிருக்க வேண்டும். ஆக தற்போது ஆளும் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் சரிசமமான பலம் இருக்கிறது. எனவே ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவர் அம்மாநில பொதுப்பணித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வந்தார். மாநிலத்தின் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு மீது காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தி இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
தனது ராஜினாமாவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசைமச்சர் விக்ரமாதித்ய சிங், "தற்போதைய சூழ்நிலையில் நான் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக நீடிப்பது சரியல்ல என்பதை மட்டுமே நான் கூற விரும்புகிறேன். எனவே, அமைச்சர்கள் குழுவில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். வரும் நாட்களில், எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அதன்பின் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்" என்று கூறியுள்ளார். இவர் இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை இமாச்சலப் பிரதேச ஆளுநரை பாஜக எம்பிக்கள் சந்தித்திருக்கின்றனர். விரைவில் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
சூழல் இப்படி இருக்கையில், பாஜகவின் எம்எல்ஏக்கள் 15 பேரை அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார். ஜெய்ராம் தாக்கூர், விபின் சிங் பர்மர், ரந்தீர் சர்மா, லோகேந்தர் குமார், வினோத் குமார், ஹன்ஸ் ராஜ், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, திரிலோக் ஜம்வால், சுரேந்தர் ஷோரி, தீப் ராஜ், பூரன் தாக்கூர் ஆகியோர் இந்த 15 பேர் லிஸ்ட்டில் இருக்கின்றனர்.
பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் தற்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், சூழ்நிலை பாஜகவுக்கு சாதகமாக மாறுவதற்குள், அதை சரி செய்ய கர்நாடக காங்கிரசின் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் சிம்லா சென்றிருக்கின்றனர்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்












Click it and Unblock the Notifications