நம்ம அக்கவுண்ட்டுல ரூ15 லட்சம் போடுவாங்களா? - அருண்ஜேட்லி விளக்கம்
டெல்லி: வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் முழுமையாக மீட்கப்பட்டால்தான் அனைவருக்கும் ரூ15 லட்சம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் வங்கிக் கணக்கில் ரூ15 லட்சம் எப்போது போடப்படும் என்று எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அருண் ஜேட்லி அளித்த பதில்:
கறுப்புப் பணம் தொடர்பான விசாரணையில் இதுவரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட 3,250 கோடி ரூபாய் தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கறுப்பு பணம் மீட்டுக் கொண்டு வரப்பட்டால் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தேர்தல் பிரசாரத்தின் போது மோடி கூறினார்.
அந்தப் பேச்சானது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் தொடர்பாக வெளியான பல மதிப்பீடுகளின் அடிப்படையில் உத்தேசமாக சொல்லப்பட்டதாகும்.
சுவிட்சர்லாந்து நாட்டின் எச்.எஸ்.பி.சி., வங்கியில் கறுப்பு பணம் பதுக்கி இருப்போர் என முதலில் 628 பேர் பட்டியல் வெளியானது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி வரும் 31-ந் தேதிக்குள் முடிந்து விடும். கறுப்பு பணம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஒவ்வொரு மாதமும் உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர்.
அத்துடன் கறுப்பு பணம் உருவாவதையும் அதை வெளிநாட்டில் பதுக்குவதையும் தடுக்க சட்ட விதிகளை கடுமையாக்குவது தொடர்பாகவும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர். சிறப்பு குழுவினரின் பரிந்துரைகளில் சில மத்திய பட்ஜெட் அறிவிப்பில் ஏற்கனவே இடம் பெற்று உள்ளன. மேலும் கறுப்பு பண பதுக்கலை தடுக்க தனிச்சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications