ஆந்திராவில் மருந்து கம்பெனியில் உலை வெடித்து 16 பேர் பலி.. அனகாபள்ளியில் என்ன நடந்தது?
அமராவதி: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் எஸ்சென்ஷியா என்ற பார்மா கம்பெனியில் உலை வெடித்து சிதறியதில் 16 பேர் பலியாகி உள்ளார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வரும் இந்த பார்மா கம்பெனியில், விபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தின் சிறப்பு பொருளாதார மண்டலப் (SEZ) பகுதி அச்சுதாபுரத்தில் இருக்கிறது. இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. இதில், மூவாயிரம் ஏக்கரில் மருந்து தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் ஃபார்மா SEZ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு, சேமிக்கப்படும். இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. மொத்தம் 208 நிறுவனங்கள் உள்ளன.

இந்நிலையில் 'எசென்ஷியா அட்வான்ஸ்டு சயின்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தல் இன்று (ஆகஸ்ட் 21ம் தேதி) மதியம் உணவு இடைவேளை நேரத்தில் பாய்லர் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பலத்த வெடி சத்தம் கேட்டிருக்கிறது, தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் அடர் புகை மூட்டமாக மாறியது. விபத்து நடந்த போது தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளார்கள். பல ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார்கள்.
இதனிடையெ பாய்லர் வெடித்ததால் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் இறந்து போனார்கள். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். இந்த விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர் . இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் எழுந்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. 36க்கும் மேற்பட்டோர் விபத்தில் காயம் அடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அனகாபல்லி மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசியதுடன், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் தேவைப்பட்டால், ஏர் ஆம்புலன்ஸையும் பயன்படுத்தி காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார். நாளை விபத்து நடந்த இடத்தினை முதல்வர் சந்திபாபு நாயுடு பார்வையிட உள்ளார். இதனிடையே விபத்து குறித்து அறிந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடும் அதிர்ச்சியும் வேதனை அடைந்ததாக கூறியதுடன், இரங்கல் தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications