Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

16 வயது சிறுவனை ஒரு வருடமாக பலாத்காரம் செய்த 15 டீன் ஏஜ் மாணவர்கள்!

மும்பையில் 16 வயது பள்ளி மாணவனை 15 டீனேஜ் மாணவர்கள் ஒரு வருடமாக பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: 16 வயது சிறுவனை 15 மாணவர்கள் ஒரு வருடமாக மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சிப் பள்ளியில் 16 வயது சிறுவன் ஒருவன் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளான். இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

 A 16-year-old boy allegedly raped by 15 boys over the past one year

கடந்த 2016ஆம் ஆண்டு சிறுவனின் அறைக்கு அருகே உள்ள மற்றொரு அறையில் வசிக்கும் சக மாணவன் ஒருவன் இந்த சிறுவனை முதல் முறையாக பலாத்காரம் செய்துள்ளான். மேலும் அதனை தனது செல்போனிலும் அவன் படம் பிடித்து வைத்துள்ளான்.

பின்னர் அந்த வீடியோவை தனது மற்ற நண்பர்களிடமும் காட்டியுள்ளான். இதனை பார்த்த மற்ற மாணவர்கள் சிறுவனை தாங்களும் பலாத்காரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

ஓராண்டாக பலாத்காரம்

இதையடுத்து மற்ற 15 மாணவர்களும் கடந்த ஓராண்டாக சிறுவனை மிரட்டி பள்ளி விளையாட்டு மைதானத்தில் வைத்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இந்த விஷயத்தை வெளியில் கூறினால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

பணம் கேட்டு டார்ச்சர்

இதனால் அஞ்சிய சிறுவன் மற்ற மாணவர்களின் கொடுமையை சகித்துக் கொண்டிருந்தான். இந்நிலையில் கடந்த ஜூன் 26ஆம் தேதி சிறுவனிடம் ஹோட்டலில் சென்று சாப்பிட 1100 ரூபாய் பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

மீண்டும் பலாத்காரம்

அந்த சிறுவன் பணம் இல்லை என கூறியதை அடுத்து மீண்டும் சிறுவனை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத சிறுவன் தனது நண்பன் ஒருவனிடம் நடந்தது குறித்து கூறியுள்ளான்.

போலீஸில் புகார்

இதையடுத்து கட்டுமானப்பணி சூப்பர்வைசர் மூலம் போலீசாரிடம் அந்த சிறுவன் புகார் அளித்துள்ளான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவ சோதனைக்கு அனுப்பினர்.

7 மாணவர்கள் கைது

இதில் சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டது நிரூபணமானது. இதையடுத்து 15 மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 7 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

டீனேஜ் மாணவர்கள்

மற்ற மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 15 மாணவர்களும் 15லிருந்து 17 வயதுக்குட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+