ஆந்திரா- ஒடிசாவில் தொடரும் கனமழை 38 பேர் பலி!
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழைக்கு 38 பேர் பலியாகி உள்ளனர். இதில் 28 பேர் ஆந்திராவிலும், 10 பேர் ஒடிசாவிலும் பலியாகி உள்ளனர்.
வங்க கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அங்கிருந்து நகர்ந்து, தெலுங்கானாவை ஒட்டி உள்ள கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் நிலை கொண்டு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திராவில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழைக்கு இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அணைகள் நிரம்பின
கனமழை காரணமாக ஆந்திர மாநிலத்தின் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. கிருஷ்ணா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலோ ஆந்திரா, ராயலசீமா போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்திலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மீட்புப்பணிகள்
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசாவில் வெள்ளம்
இதனிடையே ஒடிசாவில் ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வசித்த 1.5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இயல்பு வாழ்க்கை
தொடர்ந்து பெய்யும் மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. வீடு இடிந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். புயல் தாக்குதலில் இருந்து மீள முடியாத நிலையில் ஒடிசாவை தற்போது பெய்யும் தொடர் மழை மேலும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது.

ரயில்கள் ரத்து
ஆந்திரா - ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து அவுராவுக்கு இன்று காலை 8.45 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது.

மழை வலுக்கும்
இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடைந்து இருப்பதாகவும் இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆந்திரா-ஒடிசாவில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications